570. | யானென்றங்(கு) அண்ணா மலையான், அகம்புகுந்து யானென்றங்(கு) ஐயறிவும் குன்றுவித்து - யானென்றங்(கு) ஆர்த்தானே யாயிடினும் அம்பரன்மேல் அங்கொன்றை ஆர்த்தானேல், உய்வ தரிது. | | 14 |
571. | அரியாரும் பூம்பொழில்சூழ் ஆமாத்தூர் அம்மான் அரியாரும் பாகத் தமுதன் - அரியாரும் வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம் வேங்கடத்து நோயால் வியந்து. | | 15 |
572. | வியந்தாழி, னெஞ்சே, மெல்லியலார்க் காளாய் வியந்தாசை யுள்மெலிய வேண்டா; - வியந்தாய கண்ணுதலான் எந்தை,கா பாலி கழலடிப்பூக் கண்ணுதலாம் நம்பாற் கடன். | | 16 |
570.குறிப்புரை: "அண்ணாமலையான், அம்பரன்" என்பவற்றை முதற்கண் கூட்டியுரைக்க.அன்பான் - அழகிய இறைவன். "யான்" மூன்றில்முன்னது இறைவன் தான் தன்னை அறிமுகப்படுத்தியது,இடையது, 'யான்' என்னும் செருக்கு. 'என்ற' என்பதன்ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ஐயறிவு - ஐம்புலஅறிவு. இறுதியது, இறைவன், 'எல்லாவற்றிற்கும்முதல்வன் யானே' என அறிவித்தது. மூன்றாம் அடியில்உள்ள ஆர்த்தல் ஆரவாரித்தல். ஈற்றடியில் உள்ளஆர்த்தல் இறுகக் கட்டுதல்; சூடியிருத்தல்.'கொன்றை மாலையை என்ககுத் தாராமல் தானேசூடியிருப்பானாயின், யான் உய்வது அரிது' என்க.இதுவும் முன்னைத் துறை. 571.குறிப்புரை: "அரி"மூன்றில் முதலது வண்டு; இடையது திருமால்; இறுதியதுசிங்கம், மூன்றாம் அடியில் "வேங்கடம்"திருவேங்கட மலை (மேவா உயிரெல்லாம் வியந்துகடத்து நோயால்வேம்) என்க. மேவுதல் - விரும்புதல்.கடம் - உடல். வியத்தல், உடலை, 'இளையது' என்றும்,'அழகிது' என்றும் புகழ்தல். வேம் - வேகும்; அழியும்.இப்பாட்டால் திருவேங்கட மலையில்எழுந்தருளியிருப்பவர் அரியர்த்தேசுரர் (சங்கரநாராயணர் ஆதல் விளங்கும். முதலாழ்வார் பாடலும்1 இக்கருத்தை வலியுறுத்தும். 572.குறிப்புரை: வியம் தாழி -எனது ஏவலிற் பொருந்து. இந்த ஏவல் வினைமுற்றில்இகரவிகுதி தகர ஒற்றுப் பெறாமல் வந்தது. 'தாழ்தி'என்றே பாடம் ஒதலுமாம், தாழ்தல் - தங்குதல். இதனை
1. திவ்வியப் பிரபந்தம் - 3188, 3281, 3446. பதிப்பு -கி. வெங்கடாமி ரெட்டியார், 1981.
|