பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை458

573.கடனாகம் ஊராத காரணமும், கங்கை
கடனாக நீகவர்ந்த வாறும் - கடனாகப்
பாரிடந்தான் மேவிப் பயிலும் பரஞ்சோதி,
பாரிடந்தான் மேயாய், பணி.

17


574.பணியாய் மடநெஞ்சே, பல்சடையான் பாதம்;
பணியாத பத்தர்க்குஞ் சேயன் - பணியாய
ஆகத்தான் செய்துமேல், நம்மை அமரர்கோன்
ஆகத்தான் செய்யும் அரன்.

18


இறுதிக்கண் கூட்டுக. வியந்து -(அவர்களைப்) புகழ்ந்து வியம்தாய - அகன்ற இடமுழுதும்நிறைந்த. கண் நுதலான் - கண் பொருந்திய நெற்றியைஉடையவன். அடிப்பூ - திருவடியாகிய மலர். கண்ணுதல் -நினைத்தல். 'நம்பால் உள்ள கடன்' என் ஒரு சொல்வருவிக்க. கடன் - கடமை "என்கடன் பணிசெய்துகிடப்பதே"1 என அப்பரும் அருளிச் செய்தார்.

573.குறிப்புரை: "கடன்"இரண்டில் முன்னது மதம்; அது, 'கடம்' என்பதன் இறுதிப்போலி. பின்னது கடமை, "பாரிடம்" இரண்டில்முன்னது பூதகணம்; பின்னது பூமியாகிய இடம், பணி -சொல்லியருள். இரண்டாம் அடியில் உள்ள"கடனாகம்" என்பதை. 'கடல் நாகம்' - எனபிரிக்க இதில் நாகம் - விண்ணுலகம் 'நாகக் கடல்கங்கை' என மாற்றி, விண்ணுலகத்தில் இருந்தகடல்போலும் கங்கையை' என உரைக்க. முதலில் உள்ளநாகம், யானை, மேவி - விரும்பி பயிலும் - சூழ்கின்ற.மேயாய் - விரும்பி எழுந்தருளியிருப்பவனே,'பரஞ்சோதி, மேயாய், யானையை ஊராமல், எருதை ஊரும்காரணத்தையும், ஆகாய கங்கையை உன்சடைமுடியில்கவர்ந்து வைத்த காரணத்தையும் பணி' என முடிக்க.'முன்னதன் காரணம் அறத்தை நடத்ததுதலும், பின்னதன்காரணம் பகீரதன் தவமும்' என்பது கருத்து."தான்" இரண்டும் அசைகள்.

574.குறிப்புரை: பணி ஆதபத்தர்- இடையறாத பணியை (தொழிலை) உயை வெயிலவர்.(ஆதபம் வெயில்) ஆதித்தர். சேயன் - சிவந்த ஒளியைஉடையவன், 'சூரியர் பலர் ஒன்று கூடினால் உண்டாகும்ஒளியைவிடமேலான ஒளியை உடையவன்' என்றபடி. பணி ஆயஆகம் - பாம்புகள் பொருந்திய உடம்பை உடையவன்செய்துமேல் - செய்வோ மாயின். தான், அசை,'நெஞ்சே, பல் சடையான் பாதம் பணியாய்;செய்துமேல் சேயனும் ஆகத்தானும் ஆகிய அரன் நம்மைஅமரர் கோனாகச் செய்யும்' - என இயைத்து முடிக்க,"ஆதபத்தர்க்கு" என்னும் நான்கன் உருபு,'ஆதபத்தரினும்'


1. திருமுறை - 5.19.9.