575. | அரன்காய நைவேற்(கு) அநங்கவேள் அம்பும் அரன்காயும்; அந்தியுமற் றந்தோ! - அரங்காய வெள்ளில்சேர் காட்டாடி வேண்டான்; களிறுண்ட வெள்ளில்போன் றுள்ளம் வெறிது. | | 19 |
576. | வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை வெறியார்,பூந் தாரார் விமலன் - வெறியார்தம் அல்லல்நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆரூர்க்கோன் அல்லனோ? நெஞ்சே, அயன். | | 20 |
என ஐந்தாவதன் பொருளில் வந்தது."செய்தும்" என்பது வேறு முடிபாகலிற் பால்இடவழுவிய 'நம்மை அமரர் கோன் ஆக' பன்மையொருமைமயக்கம். 575.குறிப்புரை: அரன் காய - சிவன் (என்னைவிரும்பாமல்) வெறுத்தலால், "அம்பும் அரன்"என்பதில் அரம், "அரன்" எனப் போலியாய்வந்தது. அது காரிய ஆகுபெயராய் அரத்தால் அராவிஉண்டாக்கப்பட்ட கூர்மையைக் குறித்தது. உம்மையைமாற்றி, 'அநங்க வேள் அம்பின் அரனும் காயும்'என்க. மற்று, அசை "வெள்ளில்" இரண்டில்முன்னது வெற்றிடம்; பின்னது விளாமரம். ஆடி, பெயர்.மேற்புறம் அழகாய் இருந்து உள்ளே ஒன்றும்இல்லாததை, 'வேழம் உண்ட விளாங்கனிபோல்வது'என்றல் வழக்கு. 'வேழம் உண்டல்' என்பதுவிளாங்கனிக்கு இயற்கையில் ஏற்படுகின்ற ஒருநோய். 'தேரை மோந்த தேங்காய்' என்றலும் இதுபோல்வதே, இப்பழ மொழிகளால் யானையும், தேரையும்உண்ணாமலே பழியைச் சுமத்தலால் உண்ணாமலே வரும்பழிக்கு இவைகளை உவமை யாக உலகத்தார் கூறுவர்.'அரங்க ஆய காட்டின்கண் ஆடி (என்னை) வேண்டான்.(அதனால்) என் உள்ளம் களிறு உண்ட வெள்ளில்போன்று வெறிதாயிற்று. (இங்ஙனம்) அரன் காயநைவேற்கு அநங்க வேள் அம்பின் அரமும்காயாநின்றது, அந்திக் காலமும் அந்தோ!' எனஇயைத்து முடிக்க. "அந்தோ" என்பதன் பின்'கொடிது' என்பது எஞ்சிநின்றது. இதுவும்கைக்கிளைப்பட்டாள் ஒருத்திதன் கூற்று. 576.குறிப்புரை: வெறி யானை ஊர் - மதத்தைஉடைய யானையை ஊர்தியாகக் கொண்டு ஊர்கின்றவேந்தர்பின் செல்லும் வேட்கை வெறியார் -(பரிசில் வேண்டி) அரசர் பின்னே திரிகின்றஆசையில்லாதவர்கள். விமலன் வெறியார் - மலம்இல்லாதவனாகிய இறைவன்மேல் பித்துக் (பேரன்பு)கொண்டவர்கள். 'ஐயன்' என்பது 'அயன்' எனப்போலியாய் வந்தது. ஐயன் - தலைவன். 'நெஞ்சே,யாவர்க்கும் தலைவனாவான் வேட்கை வெறியாரும்,விமலன்
|