பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை460

577.அயமால்ஊண்; ஆடரவம் நாண(து) அதள(து) ஆடை
அயமாவ(து) ஆனே(றுஆ)ர் ஆரூர் - அயமாய
என்னக்கன், தாழ்சடையன், நீற்றன் எரியாடி
என்னக்கன் றாழும் இவள்.

21

578.ஆழும் இவளையுங் கையலஆற் றேனென்(று)
ஆழும் இவளை அயராதே - ஆழும்
சலமுடியாய் சங்கரனே சங்கக் குழையாய்,
சலமுடியா தின்றருள்வாய் தார்.

22


வெறியாரும் ஆகிய அடியார்களது நோயைத்தீர்க்கும் அருமருந்தாம் ஆரூர்க்கோன் அல்லனோ'என இயைத்து முடிக்க. 'அங்ஙன மாக, நீ பிரறரைநாடியலைதல் எற்றுக்கு' என்பது குறிப்பெச்சம் இனி,"அயன்" என்பதைப் போலியாக்காமல், 'அயன்முதலாகிய காரணக் கடவுளர்களும் அவனே யன்றோ' எனமுடிப்பினும் ஆம்.

577.குறிப்புரை: "அயம் ஆல்ஊண்" என்பதில், "ஊண்" என்பதை முதலிற்கூட்டுக. ஆல், அசை, 'ஐயம்', அயம் எனப் போலியாய்வந்தது. ஐயம் - பிச்சை. அதள் - தோல்."அயமாவது" என்பதில், குதிரையை உணர்த்துவதாய"அயம்" என்னும் பெயர் இங்குப் பொதுப்பட'ஊர்தி' என்னும் பொருட்டாய் நின்றது. அடியின்இறுதியிலும், 'ஐயம்' என்பது போலியாய்"அயம்" என வந்தது. ஐயம், இங்கு, சந்தேகம்.ஐயம் மாய - சந்தேகம் நீங்க இதனை, "ஆழும்"என்பதற்குமுன் கூட்டுக. நக்கன். உடை உடாதவன்.உரிமை பற்றி, "என் நக்கன்" எனத் தம்தமனாக்கிக் கூறினார். 'ஆடிபால்' என ஏழாவதுவிரிக்க. 'இவள் என் நக்கு அன்று ஆழும்' என இயைத்துமுடிக்க. நகுதல் - மகிழ்தல்; விரும்புதல். அன்று -அவனைக் கண்ட அன்றே. ஆழும் - காதல் வெள்ளத்தில்ஆழ்வாள். 'என் நக்கனுக்கு ஊண் ஐயம்; நாண் அரவு;ஆடை அதள்; அய.மாவது ஆனேறு; ஊர் ஆரூர்; (அங்ஙனமாக,அவன்பால்) இவள் என் நக்கு அன்று முதலாக ஐயம் மாயஆழும்' என இயைத்து முடிக்க. இதுவும் பழிப்பது போலச்சிவபெருமானது வசிகரத்தைப் புகழ்ந்தவாறு.

578.குறிப்புரை: ஆழும் சலமுடியாய் - வீழ்வார் அமிழ்ந்து போதற்குரியநீரையணிந்த முடியை உடையவனே. இதனுடன்பிறவற்றையும் முதலிற் கூட்டுக. முதற்கண் உள்ள,"ஆழும் இவ்வளையும் கை அல; ஆற்றேன்" என்பதுகாதல் கொண்டாள் ஒருத்தியது கூற்று. "வளை"என்பது ஆகு பெயராய், நிலத்தை வளைத்துள்ள கடல்அலைகளைக் குறித்தது. கை - ஒழுக்கம், அஃதாவது,பிறர்மாட்டு இரக்கம், ஒழுக்கம் உடையவற்றை'ஒழுக்கம்' என்றே கூறினார். கடல் அலை எழுப்பும்ஒசை காதலால்