பக்கம் எண் :

461சிவபெருமான் திருவந்தாதி

579.தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத்
தாராதே சங்கஞ் சரிவித்தான்; - தாராவல்
லானைமேல் வைகும் அணிவயல்ஆ, ரூர்க்கோன்நல்
லானையும் வானோர்க் கரசு.

23

580.அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க்(கு) அம்மான்
அரசுமாம் அங்கொன்றும் மாலுக்(கு) - அரசுமான்
ஊர்தி எரித்தான் உணருஞ் செவிக்கினியன்,
ஊர்தி எரித்தான் உறா.

24


இரவெல்லாம் தூங்காது துன்புறுபவர்களை மேலும்தூங்க ஒட்டாது ஒலித்து வருத்துவன கடல் அலைகள்,அவைகளை, "கை அல" என்றாள். "இவ்வளைதன்பதில் வகர ஒற்றுத் தொகுக்கப் பட்டது. அயராதே- மறந்து விடாதே. ஈற்றடியில் உள்ள "சலம்" -வஞ்சனை. முடியாய் - இப்பொழுது கொண்டுள்ள இந்தவஞ்சனையை இறுதி வரையில் கொள்ளாதே. தார் -மாலை. 'தார் அருள்வாய்' என்க. இதுவும் காதல்கொண்டாள் ஒருத்தி கூற்று.

579.குறிப்புரை: இரண்டாம் அடி இறுதியில் உள்ள"தாரா" - தாராக் கோழி; அது வயலுக்கு அடையாதலின், "அணிவாய்" என்பதற்கு முன்னேசெல்லக் கூட்டுக. ஆன்ஐ - எருதை. மேல் வைகும் -'மேற்பொருந்தி ஊர்கின்ற அரசு' என்க, நல்லான் -நல்லவன். நையும் - வானோர் - பல துன்பங்களால்வருந்துகின்ற தேவர். அரசு - தலைவன். இதுவும்கைக்கிளைத் தலைவி கூற்று.

580.குறிப்புரை: அம் மான் -அழகிய பெண்; இலக்குமி, அவளுக்கு அரசு (கணவன்)"அரசும் ஆம்" என்றாராயினும், 'அரசுஆகின்றவனும்' என்றலே கருத்து என்க. அங்கு ஒன்றும் -இலக்குமியாகின்ற அப்பொழுதே தனது ஒருபாகத்தில்பொருந்துகின்ற. அரசும் - தலைவன் ஆகின்றவனும், ஆன்ஊர்தி - இடபத்தை ஊர்பவன். எரி - எரிபோலும்உருவம் உடையவன். 'தான் கண்ணுக்கு எரிபோலத்தோன்றினும் செவிக்கு இன்பன்' என்க. செவிக்குஇன்பனாதல், பலர்க்கு அருள் புரிந்தமையைக்கேட்டலால் வரும் இன்பத்தைத் தருபவனாதல்."தான்" என்பதன்பின், 'ஆயினும்' என்பதுஎஞ்சி நின்றது. ஈற்றடியில், 'தீ யெரித்தான்'என்பது 'தி எரித்தான்' எனக் குறுகி நின்றது. அதற்குமுன் உள்ள 'ஊர்' - திரிபுரம். 'தீயால்' என உருபுவிரிக்க. உறுதல் - விரும்புதல். "உறார் போன்றுஉற்றார் குறிப்பு1 'உறாது' என்பது ஈறு குறைந்துநின்றது. 'ஊரை உறாது தீயால் எரித்தான்' என்க."ஆட்பட்டார்க்கு" என்னும் நான்கண் உருபைஇரண்டன் உருபாகத் திரிக்க. 'அம் மானுக்கு அரசு


1. திருக்குறள் - 1097.