பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை462

581.உறாவேயென் சொற்கள் ஒளிவளைநின் உள்ளத்(து)
உறாவேதீ உற்றனகள் எல்லாம் - உறாவேபோய்க்
காவாலி தார்நினைந்து கைசோர்ந்து மெய்சோர்ந்தாள்
காவாலி தாம்நின் கலை.

25

582.கலைகாமின்! ஏர்காமின்! கைவளைகள் காமின்!
கலைசேர் நுதலிர்நாண் காமின்! - கலையாய
பால்மதியன், பண்டரங்கன், பாரோம்பு நான்மறையன்
பால்மதியன் போந்தான் பலிக்கு.

26


ஆகின்றவனும், அப்பொழுதே தனது ஒருபாகத்தில்பொருந்துகின்றவனும் ஆகிய மாலுக்குத் தலைவன்ஆகின்றவனும், ஆன் ஊர்தியும், தான் எரியாயினும்செவிக்கு இன்பனும் ஊர் உறாது எரித்த வனும் ஆகியசிவபெருமான் தனக்கு ஆட்பட்டவரை அரசுமாய்ஆள்விக்கும்' என இயைத்து முடிக்க.

581.குறிப்புரை: ஒளி வளை,தலைவி. 'ஒளிவளை நினைந்து சோர்ந்தாள்' என்க.மூன்றாம் அடியில் உள்ள "காவாலி" என்பது'காபாலி என்பதாம். 'காபாலியாகிய நின் தார்(மாலையை) நினைந்து (நினைதலால் இரண்டாம் அடிமுதலில் உள்ள "உறா" என்பது, 'உற்று' என,'மிகுந்து' என்னும் பொருட்டாயிற்று. வே தீ -'வேகின்ற தீ' என வினைத்தொகை. 'தீயைப்போலஉற்றனகள் எல்லாம்' என்க. 'கள்', விகுதி மேல்விகுதியாய் வந்தது. ஏகாரத்தை மாற்றி வைத்து 'உறாபோயே, கைசோர்ந்து மெய் சோர்ந்தாள்' என்க.உறா - பற்றி. ஏகாரம் தேற்றம். கைசோர்தல்செயல் அறுதல். மெய்சோர்தல் நினைவிழத்தல். (இதுபற்றி எழுந்த என் சொற்கள் (காபாலி) நின்உள்ளத்து உருவோ? வாலிதாம் நின் கலை கா' என்க.கலை - பிறை. 'பிறை இனியும் தனது நிலவை வீசுமாயின்உன்னைப் பெண் பழி சாரும்' என்றபடி. வாலிது -வெள்ளிது. கா - தடைக்காவல் செய். இது தலைவியதுஆற்றாமை குறித்துச் செவிலி வேண்டியது.

582.குறிப்புரை: "கலைசேர்நுதலிர்" என்பது முதலாகத் தொடங்கி, "நாண்காமின்" என்பதை இறுதியில் வைத்து உரைக்க. கலைசேர் - பிறை சேர்ந்தது போலும். கலையாய பால் -நூல்களாய பகுதிகள். மதியன் - அவற்றால் விளங்கப்பெறும் அறிவாய் உள்ளவன் 'பாண்டரங்கன்' என்பதுகுறுகி நின்றது. பாண்டரங்கம், ஒருவகைக் கூத்து, பால்மதியன் - பால்போலும் பிறையை அணிந்தவன். பலி -பிச்சை. 'பலிக்குப் போந்தான்' என்க. 'தானேமகளிரை மெலியச் செய்தல் போகப் பிறையையும்அணிந்துவந்தான்' என்றபடி. முதற்கண் உள்ள கலை -ஆடை. காமின் - இழவாது காப்பாற்றுங்கள். ஏர் - அழகு.இது தொழியர் தலைவியர்க்குக் கூறியது.