583. | பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கள் சூழப் பலிக்க மனைபுகுந்து பாவாய், - பலிக்குநீ ஐயம்பெய் என்றானுக்(கு) ஐயம்பெய் கின்றேன்மேல் ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து. | | 27 |
584. | ஆயம் ஆழிய, அலர்கொறைத் தார்வேண்டி ஆயம் அழிய, அயர்வேன்மேல் - ஆயன்வாய்த் தீங்குழலும், தென்றலும், தேய்கோட் டிளம்பிறையும் தீங்குழலும் என்னையே தேர்ந்து. | | 28 |
585. | தேரோன் கதிரென்னுஞ் செந்தழலால் வெந்தெழுபேய்த் தேரோன் கதிரென்னுஞ் செய்பொருள்நீ - தேராதே கூடற்கா வாலி குரைகழற்கா, நன்னெஞ்சே கூடற்கா வாலிதரக் கூர். | | 29 |
583.குறிப்புரை: பலிக்கு -பிச்சைக்கு. பலிக்கும் மனை - பயன் விளையும்இல்லம். பாவாய் - பெண்ணே 'பல்லி' என்பதுஇடைக்குறைந்து "பலி" என வந்தது. பல்லிக்கு -பல்லைக் காட்டிக்கொண்டிருக்கின்ற இந்தப்பாத்திரத்தில். ஐயம் பெய் - பிச்சையிடு. ஐ அம்பு- ஐந்து அம்புகள். அநங்கன் - மன்மதன். இது தலைவிதோழிக்கு அறத்தொடு நின்றது. 584.குறிப்புரை: ஆய் அம் -நுணுகிய அழகு. ஆயம் - தோழியர் கூட்டம். அவர்அழிதலாவது வருந்தி இரத்தல். 'தோழியர் வருந்திக்கொண்டிருக்கச் சோர் வடைகின்ற என்மேல்' என்க.'ஆயன் குழல்' என இயையும் ஆயர் ஊதும் குழல் மாலைக்காலம் நெருங்குதலைத் தெரிவித்தலால் தனிமையால்வாடுவார்க்கு அதனால் துன்பம் மிகும். தேய் கோடு -கூரிய முனைகள். 'இவை வருந்துதல் சொல்ல வேண்டுமோ'என்பதாம். தீங்கு உழலும் - தீமை செய்து கொண்டுதிரிகின்றன. இதுவும் கைக்கிளைத் தலைவி கூற்று. 585.குறிப்புரை: "நன்னெஞ்சே" என்பதை முதலில் வைத்தும்."கழற்கு ஆ" என்பதில் உள்ள "ஆ" என்பதைஇறுதியில் வைத்தும் உரைக்க. தேரோன் -வியத்தகுதேரை உடையவன்; சூரியன். வெந்து,(மணல்கள்) வேதலால் பேய்த் தேர் - கானல்.அதனையும் ஒரு தேவனாக வைத்து "பேய்த்தேரோன்" என உயர்திணையாகக் கூறினார். அதன்இழிவு தோன்றுதற்கு, 'இளமையார் போவார்;முதுமையார் வருவார்' என்றல் போல, கதிர் - ஒளி.பேய்த் தேரின் ஒளி நிலையாத நீங்குவது போலநில்லாது நீங்கும் பொருள்' என்க. "என்னும்"என்பன உருவக உருபும், உவம உருபுமாய் வந்தன. தேராது -அதனை அடையும் வழியை ஆராயாமல், கூடல் காவாலி
|