பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை464

586.கூராலம் மேயாக் குருகோடு நைவேற்குக்
கூரார்வேற் கையார்க்காய்க் கொல்லாமே - கூரார்
பனிச்சங்காட் டார்சடைமேற் பால்மதியைப் பாம்பே,
பனிச்சங்காட் டாய்,கடிக்கப் பாய்ந்து.

30

587.பாயும் விடையூர்தி பாசுபதன் வந்தெனது
பாயிற் புகுதப் பணை முலைமேல் - பாயிலன்நற்
கொன்றாய் குளிர்சடையாற் கென்நிலைமை கூறாதே
கொன்றாய்; இதுவோ குணம்!

31


மதுரையில் உள்ள கபாலி, அவன் கழலைக் கூடுதற்காக.ஆலிதர - கண்ணீர் மழை போல வார. கூர் ஆ - மிகுந்தஅன்பை உடைய ஆகு.

586.குறிப்புரை: கூர் ஆலம் -மிக்க நீர். (அதன்கண் சென்று) மேயாக் குருகு -இரையை உண்ணாமல் (ஏதோ காரணத்தால்)வாடியிருக்கின்ற) நீர்ப் பறவையோடு. நைவேற்கு -(உன்னையும் உன் துணை விட்டுச் செல்ல)'வாடுகின்றாயோ" என்று சொல்லி வருந்துகின்றஎன் பொருட்டு, 'பாம்பே, பால் மதியைப் பனிச்சுஅங்கு அட்டாய்' என இயைத்து முடிக்க. 'பனிப்பித்து'என்பது பிறவினை விகுதி தொக்கு, 'பளிச்சு' எனப்போலியாயிற்று. 'நடுங்குவித்து' என்பது பொருள்.அங்கு ஆட்டாய் - அந்தச் சடையிலே அலைக்கழி.தமக்குத் துன்பம் செய்பவர்களைத் தம்மால்துன்புறுவிக்க இயலாதபொழுது, அதற்குஏற்புடையவர்களைக் கொண்டு துன்புறத்தவிலாகியஉலகியல்பு பற்றி, தன்னை வருத்தும் பால்மதியைவருத்தும் படி பாம்பை வேண்டிக் கொண்டாள் காதல்நோயால் வருந்துகின்ற தலைவி. கடிக்கப் பாய்ந்து,கடிக்கப் போவதுபோல் பாய்ந்து (ஆட்டு). 'கடித்துக்கொன்று விட்டால் சிவபெருமான் உன்னை ஒறுப்பார்ஆதலின், அது வேண்டா' என்பாள். "கூரார் வேல்கையார்க்காய்க் கொல்லாமே" என்றாள். வேல் -முவிலை வேல், மூன்றாம் அடியில், கூந்தலைக்குறிப்பதாகிய 'பனிச்சை' என்பது, ஈற்றில் அம்முப்பெற்று, "பனிச்சம்" எனவந்தது. கூர் ஆர்பனிச்சம் - அடர்த்தி மிகுந்த கூந்தல். இஃதுஉமாதேவிதன் பாகத்தைக் குறித்தது. காட்டு ஆர் சடை- காடு போலும் சடை இதுவும் காதற் பட்டாள்ஒருத்தியது கூற்று.

587.குறிப்புரை: (கொன்றை'என்பது விளியேற்குமிடத்து, 'கொன்றாய்' எனநிற்கும்.) நற்கொன்றாய் - நல்ல கொன்றை மலரே.இதனை முதலிற் கொள்க. பாயில் புகுத - படுக்கையில்புகவும். பணை முலை மேல் பாய் - பருத்த தனங்களின்மேல் படுக்கவும் (இலன்) "பாய்" - பரவி. இது'படுத்து' என்னும் பொருட்டாய் நின்றது.