588. | குணக்கோடி கோடாக் குளிர்சடையான் வில்லின் குணக்கோடிக் குன்றஞ்சூழ் போகிக் - குணக்கோடித் தேரிரவில் வாரான் சிவற்காளாஞ் சிந்தனையே தேரிரவில் வாழும் திறம். | | 32 |
589. | திறங்காட்டுஞ் சேயாள், சிறுகிளியைத் தான்தன் திறங்காட்டுந் தீவண்ணன்; என்னும் - திறங்காட்டின் ஊரரவம் ஆர்த்தானோ(டு) என்னை யுடன்கூட்டின் ஊரரவஞ் சால உடைத்து. | | 33 |
இதனைச் செயவென் எச்சமாகத் திரிக்க. (அதனால்நீயாயினும்) என் நிலைமைகள் குளிர் சடையாற்குக்(கூறினால் உய்வேன்.) கூறாமையால் என்னைக்கொன்றுவிட்டாய் (பெரிய இடத்தில்உள்ளவர்கட்கு) இதுவோ குணம்! (நன்மை) இதுகொன்றையோ டிரங்கிய காமம் மிக்க கழிபடர்கிளவி. 588.குறிப்புரை: குணக் கோடி -கோடிகுணம்; 'அளவற்ற நன்மைகள்' என்றபடி. கோடா -அவற்றினின்றும் மாறுபடாத. வில்லின் குணம் -வில்லின் நாண், 'குணத்துக்கு' என்பதில் அத்துச்சாரியை தொகுக்கப்பட்டது. சிவபெருமானது வில்லின்நாண் பாம்பு. அஃது பாம்புகள் வாழும் நாக லோகத்தைக் குறித்தது. குன்றம், மேருமலை. குணக்கு கிழக்கு."கிழக்கே ஓடி, இல் வாரான் என்க. மூன்றாம்அடியில் 'இரவி' என்பதன் ஈற்ற இகரம்தொகுக்கப்பட்டது. ஈற்றடியில் உள்ள "தேர்",'அறிவாயாக' என ஏவல் வினை முற்று. 'நெஞ்சே' என்பதுவருவித்துக் கொள்க. 'நெஞ்சே' இரவி, சிவபெருமானதுவில்லின் நாணாகிய பாம்பு வாழும் உலகத்திற்கு ஓடி,அதன் பின்பு மேருவைச் சுற்றி வந்து, கீழ்த்திசையைஅடைந்து, தனது தேரில் எனது இல்லத்திற்கு நேராகவரவேண்டும். அவ்வாறு அவன் வரவில்லை. ஆகையால்நாம் இரவில் (இறந்துபடாது) உயிர்வாழும் முறைசிவனுக்கு அடிமையாகும் நிலைமையைச்சிந்தித்திருப்பதே. இதனை நீ அறிவாயாக - என்பதுஇதன் பொருள் இதுவும் பெண்பாற் கைக்கிளை. 589.குறிப்புரை: திறம்காட்டும் சேயாள் - அழகினால் யாவர்க்கும்ஒன்றுபடுத்திக் காட்டப்படும் இலக்குமி.'அழகினால் யாவாராலும் 'இலக்குமி' என்றேஎண்ணப்படு பவள்' என்றபடி என்றது தலைவியை."சிறுகிளியை" என்பதன் பின் நோக்கி' எனஒருசொல் வருவிக்க. 'சேயாள் சிறு கிளியை(நோக்கி) ஊர் அரவம் உடைத்து என்னை அரவம்ஆர்த்தா னோடு கூட்டின், தீவண்ணன் தன் திறம்காட்டும்' என இயைத்து முடிக்க. தன் திறம் -திருவருள்.
|