பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை466

590.உடைஓடு காடாடி, ஊர்ஐயம் உண்ணி,
உடைஆடை தோல்,பொடிசந்(து) என்னை - உடையானை
உன்மத் தகமுடிமேல் உய்த்தானை நன்னெஞ்சே,
உன்மத் தகமுடிமேல் உய்.

34

591.உய்யாதென் ஆவி ஒளிவளையும் மேகலையும்
உய்யா உடம்பழிக்கும் ஒண்திதலை; - உய்யாம்
இறையானே! ஈசனே! எம்மானே! நின்னை
இறையானும் காண்கிடாய்; இன்று.

35


காட்டும் - உனக்கு எந்தவகையிலாவது விளங்கச்செய்வான். மூன்றாவதாய் வந்த "திறம்" என்பதில் ஆக்கம் விரித்து, திறமாகக் காட்டில்ஊர்கின்ற அரவம் (பாம்பு) என்க. ஊர் அரவம் -ஊரார் தூற்றும் அலர். சால உடைத்து - முற்றிலும்போக்கி. 'எனக்காக நீ தீவண்ணனிடத்தில்தூதுசெல்ல வேண்டும்' என வேண்டிக் கொண்டபடி.

590.குறிப்புரை: (எப்பொழுதும்)உடைந்த ஓடுகளை யுடைய காட்டில் ஆடிக்கொண்டு, ஊரார்இடுகின்ற ஐயத்தையே உண்பவனாய், தோலையே' உடையும்ஆடையும் ஆகவும், சாம்பலையே சந்தனமாகவும், என்னைஆளாகவும் உடையவனும், உன்மத்தத்தைஉண்டாக்குகின்ற பூவை (ஊமத்தையை) முடிமேல்அணிந்தவனும். ஆகிய சிவபெருமானை, நல்ல நெஞ்சமே,உனது மத்தகத்தின் மேல் (தலையின்மேல்) உள்ளகுடுமிக்கு மேலே இருக்கச் செலுத்து. உடை, அரையில்உடுப்பது, ஆடை, தோள்மேல் இடுவது இதனை 'உத்தரியம்'என்பர். சந்து சந்தனம். ஆடி அசைவதால், 'ஆடை'எனப்பட்டது. வேண்டும் இடங்களில் ஆக்கம்விரிக்க. "அப்பூதி - குஞ்சிப் பூவாய் நின்றசேவடியாய்"1 என்பதனாலும் இறைவனுடைய திருவடிகள்அடியார்களது குடுமிகளில் சூடிக்கொள்ளும் பூவாதல்விளங்கும்.

591.குறிப்புரை: இரண்டாம்அடியில், "உய்யா" என்றது, 'கழல விடுத்து'என்றதாம். 'திதலை உடம்பை அழிக்கும் எனமாற்றிக் கொள்ள. "உடம்பு" என்றது,உடம்பில் உள்ள அழகை. தேமலைக் குறிப்பதாகிய'திதலை' என்பது இங்கு பசலையைக் குறித்தது. தனிச்சீரில் உள்ள, "உய் ஆம்" என்றது,'உயிர்கட்கெல்லாம் உய்தியாய் உள்ள' என்றபடி.உய், முதனிலைத் தொழிற் பெயர், இறையானும் -சிறிதாகிலும் காண் கிடாய் - காணக் கிடத்து.உன்னைக் காண என்னைக் கிடத்து' என்க. இதுவும்கைக்கிளைத் தலைவி கூற்று


1. திருமுறை - 4.12.10.