பக்கம் எண் :

467சிவபெருமான் திருவந்தாதி

592.இன்றியாம் உற்ற இடரும், இருந்துயரும்
இன்றியாம் தீர்தும், எழில்நெஞ்சே - இன்றியாம்
காட்டாநஞ் சேற்றான், காமரு வெண்காட்டான்
காட்டானஞ் சேற்றான் கலந்து.

36

593.கலம்பெரியார்க் காஞ்சிரம்,காய் வின்மேரு என்னும்,
கலம்பெரிய ஆற்கீழ் இருக்கை; - கலம்பிரியா
மாக்கடல்நஞ் சுண்டார் கழல்தொழார்க் குண்டாமோ
மாக்கடனஞ் சேரும் வகை.

37

594.கையா(று), அவா,வெகுளி, அச்சங், கழிகாமம்
கையாறு செஞ்சடையன் காப்பென்னும்; - கையாறு
மற்றிரண்ட தோளானைச் சேர்,நெஞ்சே, சேரப்போய்
மற்றிரண்ட தோளான் மனை.

38


592.குறிப்புரை: "எழில்நெஞ்சே" என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.எழில் - எழுச்சி; ஊக்கம் யாம் காட்டாஇன்றி நஞ்சுஏற்றான் - யாம் சான்றாக இல்லாமல் விடத்தைஉண்டான். (தேவர்கள் நஞ்சு ஊட்டும் பொழுது நாம்இருந்திருந்தால் தடுத்திருப்போம் என்றபடி.)காட்டான் அஞ்செழுத்து. உணர்வை விளக்கும்விளக்காக அஞ்செழுத்தை ஏற்ற பெருமான், காட்டுகாட்டுவது; விளக்கு, ஆன், மூன்றன் உருபு."காட்டான்" - என்றது, 'காட்டாய் இருத்தலால்'என்றபடி. கலந்து - நம்மிடம் வந்து கலந்தமையால்,இடர் - இடையூறுகள்.

593.குறிப்புரை: முதற்கண் உள்ள"கலம்" - அணிகலம். பெரியார்க்கு ஆம் சிரம்- பெரிய தேவர்களுக்கு ஆன தலையால் ஆகிய மாலை,காய் வில் - பகைவர்களை அழிக்கும் வில். என்னும் -என்று சொல்லப்படும். இரண்டாம் அடி முதலில் 'களம்'என்பது எதுகை நோக்கி, "கலம்" எனத் திரிந்துநின்றது. களம் பெரிதாதலாவது, நிழலால் நிலத்தில்பேரிடத்தைக் கவர்தல். இறுதியில் நின்ற"கலம்" - மரக் கலம், ஈற்றடியில்,'ஆன்மாக்கள்' என்பது முதற் குறைந்து,"மாக்கள்" என நின்றது. தனம் - பொருள்.ஆன்மாக்கள் யாவும் அடையத் தக்க பொருள் வீடுபேறு, 'அது, நித்தியத்துவத்தை உணர்த்தும்தலைமாலைகளையும், எல்லாம் வல்ல தன்மையைஉணர்த்தும் மேரு வில்லையும், ஞானோபதேசத்தைக்குறிக்கும் ஆல் நிழலையும் உடையோனாகியசிவபெருமானை முதல்வனாக உணர்ந்துபோற்றாதவர்க்குக் கிடைக்க மாட்டாது' என்றபடி.

594.குறிப்புரை: "நெஞ்சே" என்பதை முதலிலும், "சேரப்போய்" என்பதை, "மனை" என்பதற்குப்பின்னும் கூட்டி யுரைக்க. "கையாறு"