| 595. | மனைஆய் பலிக்கென்று வந்தான்வண் காமன் மனைஆ சறச்செற்ற வானோன்; - மனைஆய என்பாவாய் என்றேனுக்(கு), 'யானல்லேன், நீதிருவே என்பாவாய்' என்றான் இறை. | | 39 |
இரண்டில் முன்னது செயல் அறுதி. அது மிகுதுயரைக்குறிக்கும். கழிகாமம் - அளவிறந்த காமம். கை ஆறுசெஞ்சடை - பல பக்கங்களிலும் சுழலுகின்ற சிவந்தசடை. 'கையாறு முதலிய ஐந்தும் சிவபெருமானால்தடுக்கப்படும் - என நூல்களில் சொல்லப்படும்'என்பது முதல் இரண்டடியின் பொருள், கை ஆறு மல்திரண்ட தோளான் - வெகுண்டு வந்த கங்கையின் வலிமை பொருந்திய பல அலைகளால்துளைக்கப்படாதவன். 'ஆகாயத்தினின்றும் வீழ்ந்தகங்கையை வருத்தம் இன்றித் தாங்கினான்' என்றபடிமற்று இரண்ட தோளான் - (தேவர் பலர்க்கும்பொதுவாய் அமைந்த நான்கு தோள்களினும் வேறுபட்டஇரட்டிப்பான தோள்களை (எட்டுத் தோள்களைஉடையவன். அவனது மனையாவன திருக்கோயில்கள். 'சிவபெருமானது திருக்கோயிலை அடைந்து அவனைவணங்கினால், கையாறு முதலியவைகளுக்கு அஞ்ச வேண்டா' என்பதாம். மூன்றாம் அடியில் "திரண்ட"என்பதும், ஈற்றடியில் "இரண்ட" என்பதும்அன்பெறா அகர ஈற்று அஃறிணைப் பன்மை வினையாலணையும் பெயர்கள். 595.உரை: வண் காமன் மன் ஐ ஆசு அறச் செற்ற வானோன் - வளவிய, மன்மதனது அழகியஉடம்பை, அவனது குற்றம் நீங்குதற் பொருட்டு அழித்தஇறைவன். மனை - எனது இல்லத்தில். ஆய் பலிக்கு என்றுவந்தான் - 'பல இடங்களிலும் சென்று ஏற்கும்பிச்சைக்கு' என்று சொல்லி வந்தான் (அவனை யான்கண்டு) 'மன் ஐயாய என்பாவாய்' என்றேன் - (உன்உடம்பு முழுதும்) 'நிலையான தலைமையை உணர்த்துவனவாகிய என்பாய் உள்ளவனே' என்றேன். (அதற்கு) இறை - அவன். திருவே என் பாவாய் - 'திருமகளே' என்றுசொல்லத் தக்க பாவையே. (பெண்ணே 'என்பு ஆவாய்' எனநான் கூறியதை, 'என் பாவாய்' எனக் கூறியதாகவைத்து,) யான் அல்லேன்; நீ; என்றான் - நான் பாவையல்லேன்; (பெண்ணல்லேன்; ஆன்.) 'நீதான்பாவை' என்றான். 'என்னே அவனது சொல்திறம்' என்பதுகுறிப்பெச்சம். குற்றமாவது சிவாபாரதம்.'முன்னர்த் திருமேனியழகில் ஈடுபட்டவளாய்த் தன்உள்ளத்தைப் பறிகொடுத்தவள், பின்பு அவன்சொல்திறத்தில் ஆழ்ந்துவிட்டாள்' என்பது கருத்துஇதுவும் காதலித்தாள் ஒருத்தியது கூற்று.
|