பக்கம் எண் :

47அற்புதத் திருவந்தாதி

77.

ஆமா றறியாவே வல்வினைகள்; அந்தரத்தே
நாம்ஆளென்(று) ஏத்தார் நகர்மூன்றும் - வேமா(று)
ஒருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி
அருகணையா தாரை யடும். 

34

78.

அடுங்கண்டாய் வெண்மதியென்(று) அஞ்சி இருள்போந்
திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள்
அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல
மணிமிடற்றின் உள்ள மறு. 

35



ஆர்உருவஉள்குவார் உள்ளத்துள்ளே

அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்.1

சுருதிவா னவனாம்; திருநெடு மாலாம்;

சுந்தர விசும்பில்இந் திரனாம்;

பருதிவா னவனாம்; படர்சடை முக்கட்

பகவனாம்; அகவுயிர்க் கமுதாம்;

எருதுவா கனனாம்; எயில்கள்மூன் றெரித்த

ஏறுசே வகனுமாம்; பின்னும்

கருதுவார் கருதும் பொருளுமாம் கங்கை

கொண்டசோ ளேச்சரத் தானே.2

என்னும் திருமொழிகளைக் காண்க.

77. அ. சொ. பொ.: ‘வல்வினைகள், அணையாதாரை அடும்; (அணைந்தார்பால்) ஆமாற்றை யறியா’ என இயைத்து முடிக்க. ‘அணைந்தார்பால்’ என்பது சொல்லெச்சம். “பிறவிப் பெருங்கடல் நீந்துவர்”3 என்பதில், ‘சேர்ந்தார்’ என்பது போல. அந்தரம் - ஆகாயம். ‘அந்தரத்தே வேமாறு’ என இயையும். செற்றான் - அழித்தான். ‘அருகாக’ என ஆக்கம் வருவிக்க. அடும் - வருத்தும்.

78. அ. சொ. பொ.: ‘மறு, இருள், மதி அடும்’ என்று அஞ்சிப் போந்து இடம் கொண்டு இருக்கின்றதை ஒக்கும்’ என இயைத்துக் கொள்க. ‘கண்டாய்’ முன்னிலை யசை. அடும் - கொல்லும். ‘படங்கொள் அரவு, அணி மிடற்ற அரவு, பேழ்வாய் அரவு’ எனத் தனித்தனி இயைக்க. பாம்பு படம் எடுத்து ஆடும் பொழுது அதன் கழுத்து அழகாய் இருத்தல் பற்றி, “அணிமிடற்ற அரவு” எனப்பட்டது. பேழ்வாய் - பெரிய வாய்; எலிகளை விழுங்கும் வாய். அசைத்தான்


1. திருமுறை - 6.18.11

2. திருமுறை - 9.13.5.

3. திருக்குறள் - 10.