| 79. | மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம் தெறுமென்று தேய்ந்துழலும் ஆ!ஆ! - உறுவான் தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி வளருமோ பிள்ளை மதி. | | 36 |
| 80. | மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்ட மதியார் வளர்சடையி னானை - மதியால் என்பாக்கை யாலிகழா(து) ஏத்துவரேல் இவ்வுலகில் என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு. | | 37 |
| 81. | ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவந் தீண்டச் சிறுகியதே போலாதே? - பூண்டதோர் |
இறுகக் கட்டினவன். கோலம் அழகு. மணி மிடறு - நீல மணிபோலும் கழுத்து. மறு - கறை. இருளுக்கு வந்து இடம் கொள்ளுதல் இன்மையால் இல்பொருள் உவமையும், வந்தமைக்கு ஒரு காரணம் கற்பித்தமையால் தற்குறிப்பேற்றமும் கூடி வந்தமையின் இது தற்குறிப்பேற்ற உவமையணி இதனால் இறைவனது கண்டத்தைப் புகழ்ந்தவாறு. 79. அ. சொ. பொ.: “நாகம், வானத்திலும் தளர மீது ஓடுமேல், ‘வார்சடைமேல் தெறும்’ என்று அஞ்சி பிள்ளை மதி வளருமோ! அதனால்தான், ஆ! ஆ! தேயந்து உழலும்’ என இயைத்துப் பொருள் கொள்க. ‘நாகம் வானத்தில் மதியை விழுங்குதல் யாவரும் அறிந்தது’ என்பது கருத்து. ‘நிறைவு பெற்றால், பெரிய வானத்திலே விழுங்குகின்ற பாம்பு, சிறிய சடைக் குள்ளே விழுங்குதல் எளிதன்றோ’ என்பதாம். “வான்” என்பதில் ஏழனுருபும், உயர்வு சிறப்பும்மையும் விரிக்க. “அஞ்சி” என்பது ஓகாரத்தால் பெறப்பட்ட எதிர்மறையுடன் முடிந்தது. ‘பிள்ளை மதி நும் ஆணையால் வளராதிருக்கவில்லை; பாம்பிற்கு அஞ்சியே வளராதிருக்கின்றது’ என மறுத்தவாறு ஆ!ஆ! - வியப்பிடைச் சொல் அடுக்கு. இதுவும் பாம்பையும், மதியையும் பகை தீர்த்து உடன் வைத்திருப்பதைப் பழிப்பது போலப் புகழ்ந்தது. 80. அ. சொ. பொ.: “மதியா அவுணர்” என்க. அடல் - வலிமை, மதி இரண்டில் முன்னது திங்கள்; பின்னது அறிவு. இகழாது, மதியால் ஏத்துவரேல்’ என இயைக்க. என்பு ஆக்கையால் - எலும்பை அணிந்துள்ள மேனியைப் பற்றி (இகழாது). ஆதல் - அதுவாய்க் கலத்தல். “இவ்வுலகில்” என்றது, ‘என்பு ஆக்கைகளாய்ப் பிறப்பதற்கே இடமாய் உள்ள இவ்வுலகு’ என இதன் இழிவு கூறியவாறு. 81. அ. சொ. பொ.: “பூண்டது ஓர்” என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. ‘கொம்பு, போலாதே’ என முடியும். ஏகாரம்,
|