599. | தெளியாய் மடநெஞ்சே, செஞ்சடையான் பாதம் தெளியாதார் தீநெறிக்கண் செல்வர் - தெளியாய பூவார் சடைமுடியான் பொன்னடிக்கே ஏத்துவன்நற் பூவாய வாசம் புனைந்து. | | 43 |
600. | புனைகடற்குப் பொன்கொடுக்கும் பூம்புகார் மேயான், புனைகடுக்கை மாலைப் புராணன் - புனைகடத்து நட்டங்கம் ஆட்டயரும் நம்பன் திருநாமம் நட்டங்க மாட்டினேன், நக்கு. | | 44 |
601. | நக்கரை சாளும் நடுநாளை நாரையூர் நக்கரை வக்கரையோம் நாமென்ன - நக்குரையோம் வண்டாழங் கொன்றையான் மால்பணித்தான், மற்றவர்க்காய் வண்டாழங் கொண்டாள் மதி. | | 45 |
599.குறிப்புரை: தனிச்சீரில், "தெளி ஆய்" என்பதில் 'தெளி' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயராய், அதனையுடைய நீரைக் குறித்தது. "பூ" இரண்டில்முன்னது அழகு; பின்னது மலர். "பாசம்" என்பதும் ஆகுபெயராய் அதனையுடைய பொருளைக் குறித்தது."அடிக்கே" என்னும் நான்கனுருபை இரண்டனுருபாகத் திரிக்க. புனைதல் - சூட்டுதல். 'புனைந்துஏத்துவன்' என்க. 600.குறிப்புரை: முதல் அடியில்,'புன்னை' என்பது இடைக்குறைந்து 'புனை' என வந்தது. இதுநெய்தல் நிலக் கருப்பொருள். இதன் பூவின்மகரந்தம் பொன்போலுதலால், இதனை உதிர்த்தல்கடலுக்குப் பொன் சொரிதல்போல உள்ளதாம்.கடுக்கை - கொன்றை. புராணன் - பழையோன். புனைகடத்து - அழகிய குடமுழா ஓசையுடன். நட்டம் கம் ஆடும்.நடனத்தை சிதாகாசத்தில் ஆடுதலைச் செய்யும்.சிதாகாசம் சிதம்பரமாகிய தலத்தையும் குறிக்கும்.திருநாமம் நட்டு - திருப்பெயரை (உள்ளத்திலும், நாவிலும்) இருத்தி. நக்கு - மகிழ்ந்து. அங்கம்ஆட்டினேன் - உடம்பை ஆனந்தக் கூத்து ஆடச்செய்தேன். 'இனி எனக்கென்ன குறை' என்பதுகுறிப்பெச்சம். 601.உரை: நக்கு அரைசு ஆளும்நடுநாளை - (பேய்கள்) சிரித்துக் கொண்டு ஆட்சிபுரிகின்ற பாதியிரவில். இதன்பின் 'வந்து' என ஒருசொல் வருவிக்க. நாரையூர் நக்கர் - 'திருநாரையூர்'என்னும் தலத்தில் உள்ள சிவபெருமான் (உண்மையைக் கூறாமல்) நாம் ஐவக்கரையோம் என்ன நக்கு - 'நாம்அழகிய 'திருவக்கரை' என்னும் தலத்தில் உள்ளோம்' என்று (பொய்யாக கூறி) நகைக்கவும். உரையாம் - அவரைநாம் ஒன்றும் இகழவில்லை. (அங்ஙனமாகவும்) வண்டுஆழ் அம் கொன்றையான் மால் பணித்தான் - வண்டுகள் தேனில்
|