602. | மதியால் அடுகின்ற தென்னும்;மால் கூரும், மதியாதே வைதுரப்பர் என்னும் - மதியாதே மாதெய்வம் ஏத்தும் மறைக்காடா, ஈதேகொல்! மாதெய்வங் கொண்ட வனப்பு. | | 46 |
603. | வனப்பார் நிறமும், வரிவளையும், நாணும் வனபார் வளர்சடையான் கொள்ள, - வனப்பால் கடற்றிரையும் ஈரும்இக் கங்குல்வாய் ஆன்கட் கடற்றிரையும் ஈருங் கனன்று. | | 47 |
மூழ்கிக் கிடக்கின்ற கொன்றை மாலையை அணிந்தநாரை யூரான் (அம்மாலையைத் தாராமல்) மயக்கத்தைக் கொடுத்துப் போயினான். (அதனால் இவள்) மதிவண் தாழம் கொண்டாள் - அறிவு அவனிடத்தை தங்குதலை அடைந்தாள். 'கொண்டான்' என்பது பாடமன்று, தாழ்தல் - தங்குதல். "தாழம்", அம் ஈற்றுத் தொழிற் பெயர்.எள்ளல் பற்றிப் பன்மையில் ஒருமை மயங்கிற்கு. இதுசெவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றது. 602.குறிப்புரை: "மறைக்காடா" என்பதை முதலிலும், "ஈதேகொல்" என்பதை இறுதியிலும் கூட்டியுரைக்க. முதற்கண் உள்ள மதி,' சந்திரன். ஆல்,அசை. தனிச்சீரில் 'அஃதியாதே' என்பது. ஆய்தம்தொகுக்கப்பட்டு, 'அதியாதே' எனவந்தது. 'வைதுஉரைப்பர்; அஃதியாதே' எனக் கூட்டுக. வைதுரைப்பார்செவிலியும், நற்றாயும். அஃதியாதே - அஃது"ஏத்தும்" என்னும் பெயரெச்சம். என்ன முறைமை."மறைக்காடன்" என்பத னோடு முடிந்தது.ஈற்றடியில் உள்ள மாது, தலைவி. அதன்பின், 'எய்ப்பு'என்பது, "எய்வு" என வந்தது. 'இவளதுஎய்ப்புக்குக் காரணமான உனது வனப்பின் தன்மைஈதோ' என்க. 'இனி நீ வரைதல் இன்றியமையாதது'என்பது குறிப்பெச்சம். ஏகாரம் வினாப் பொருட்டு.கொல். அடை. அம் கொண்ட வனப்பு - இவளது அழகைக்கொள்ளை கொண்ட உனது அழகு. இது தோழி வரைவு கடாயது. 603.குறிப்புரை: முதற்கண் உள்ளவனப்பு, அழகு. இரண்டாம் அடியில் வனம், காடு, 'பரிய'எனப் பொருள் தரும். "பார்" என்பது 'திரண்ட'என்னும் பொருளைத் தந்தது. வனப்பால் - நீரின்கண்உள்ள (திரை) என்க. ஈற்றடியை, 'கடற்று + இரை'எனப்பிரித்து, 'கடற்று ஆன்கண் இரையும் ஈரும்' எனஇயைக்க. கடறு - காடு; என்றது முல்லை நிலத்தை ஆன் -ஆனிரை. இரை - இரைச்சல், 'இக்கங்குல்வாயக் கடல்வனப்பால் திரையும் ஈரும்; கடற்று ஆன்கண் இரையும்கனன்று ஈரும்' என முடிக்க. இது கைக்கிளைத் தலைவிமாலைப் பொழுதின்கண் தனிப்படர் மிக்குக்கூறியது. கங்குல், இங்கு மாலைக் காலத்தைக்குறித்தது.
|