604. | கனன்றாழி நன்னெஞ்சே கண்ணுதலார்க் காளாய்க் கனன்றார் களிற்றுரிமால் காட்டக், - கனன்றார் உடம்பட்ட நாட்டத்தன், என்னையுந்தன் ஆளா உடம்பட்ட நாட்டன் உரு. | | 48 |
605. | உருவியலுஞ் செம்பவளம்; ஒன்னார் உடம்பில் உருவியலுஞ் சூலம் உடையன், - உருவியலும் மாலேற்றான் நான்முகனும் மண்ணோடு விண்ணும்போய் மாலேற்றாற்(கு) ஈதோ வடிவு! | | 49 |
606. | வடிவார் அறப்பொங்கி வண்ணக்கச் சுந்தி வடிவார் வடம்புனைந்தும் பொல்லா - வடிவார்போல் |
604.குறிப்புரை: முதற்கண் உள்ள"கனன்று" என்பதை, 'கல் + நன்று' எனப்பிரித்து, 'நன்று கல்' என மாற்றி, இறுதியில் வைத்துஉரைக்க. ஆழி - (கவலையில்) ஆழ்தலை உடையது. கனன்றுஆர் களிறு - கோபித்து ஆர்ப்பரித்த யானை; கயாசுரன். (யானைத் தோலின் போர்வைதன்னிடத்தில்) மால் காட்ட - மாயோனதுநிறத்தைக் காட்ட. கனன்றோர் - மற்றும் பகைவர்சிலர். உடம்பு அட்ட நாட்டத்தன் - உடம்பை அழித்தநாட்டத்தன், "நாட்டம்" என்பது இரட்டுறமொழிதலாய், 'கண்' எனவும், 'கருத்து' எனவும்இருபொருள் தந்து. மன்மதன், திரிபுரத்தசுரர் ஆகியஇரு திறத்தினர்க்குப் பொருந்திற்று. "கனன்றார்" என்பது பொதுப்பட, 'பகைத்தவர்'என்னும் அளவாய் நின்றது. ஆளா உடம்பட்ட நாள் -தொண்டனாக ஏற்றுக்கொண்ட நாள். 'நாளில் காட்டியதன் உரு' என விரித்து. 'அதனை நன்று கல்' என முடிக்க.நன்று கற்றலாவது, வருணிக்கவும், புகழவும் வன்மைஎய்துதல், "உடம்பட்ட நாள் தன் உரு"என்றதனால், இவ்வாசிரியர் இறைவனால்எவ்வகையிலோ ஆட்கொள்ளப்பட்டமை விளங்கும். 605.குறிப்புரை: உரு இயலும் -உடம்பின் நிறமும்; உடம்மை சிறப்பு. இரண்டாம்அடியில் 'இயலும்' முதற் குறைந்து வந்தது. இயலும் -போகின்ற. உரு இயலும் மால் ஏற்றான் - அழகாகநடக்கின்ற பெரிய இடப உருவத்தை உடையவன்; திருமால், இங்கும் எண்ணும்மை விரிக்க, மால்ஏற்றாற்கு - மயக்கத்தை ஏற்பதற்குக் காரணமாய்இருந்தவனுக்கு; இருந்தவன் சிவபெருமான். 'வடிவு ஈதோ'என்க. ஓகாரம் வியப்பு. 606.குறிப்புரை: உந்தி வடிவார் அறப் பொங்கு வண் கச்சு (புனைந்தும்) -உந்தியின்மேல். நீண்டு தொங்குகின்ற வார்போலவே மிக விளங்குகின்ற கச்சினை(பாம்பாகிய கச்சினை)ப் புனைந்தும்.
|