பக்கம் எண் :

473சிவபெருமான் திருவந்தாதி

முற்கூடல் அம்மான் முருகமருங் கொன்றையந்தார்
முற்கூட மாட்டா முலை.

50

607.'முலைநலஞ்சேர் கானப்பேர் முக்கணான்' என்னும்
'முலைநலஞ்சேர் மொய்சடையான்' என்னும்; - 'முலைநலஞ்சேர்
மாதேவா', என்று வளர்கொன்றை, வாய்சோர,
மாதேவா, சோரல் வளை.

51


பின்னர், "புனைந்தும்" என்றதற்கு,'மார்பில் புனைந்தும்' என உரைக்க. வடம் -தலைமாலை. வடிவு ஆர் வடம் - அழகு நிறைந்த வடம்,"புனைந்தும்" என்பது முன்னரும் சென்றியைந்தது.வடிவு ஆர் வேல் - கூர்மை பொருந்திய படைக்கலம்; சூலம், முற் கூடல் - தலங்களில் முன்னிற்பதாகியமதுரை, இதனை, "முளைத்தானை எல்லார்க்கும்முன்னே தோன்றி1 என்னும் அப்பர் வாக்கினாலும் அறிக,இனி மடக்கணி கருதாது, 'முக்கூடல்' என்பதுபாடமாயின், 'திரிகூடமலை' என்க. அவ்வாறன்றி, 'முக்கூடல் வேர்திரிசூலம்' என்றலும் ஆம். தார் -போக காலத்தில் மார்பில் அணியும் மாலை,'அதனைக் கூட மாட்டா' என்றதனால், 'மார்பை அணையப்பெறவில்லை' என்றதாயிற்று. முருகு - நறுமணம். 'தேனும்'ஆம் முலை கூடமாட்டா' என்க. "மாட்டா" என்றது,'மாட்டாமை யுடையனவாய் வருந்துகின்றன' என்படிஇவைகளைப் பெருமையால் பெண்மை நலம் வாயாதோர்பலர் இருக்க. யாம் இவைகளைப் பெற்றும் பயன்என்னை' என்பது குறிப்பெச்சம் இதுவும் கைக்கிளைப்பட்ட தலைவி கூற்று.

607.குறிப்புரை: "முலை" மூன்றில் முன் இரண்டும் 'முல்லை' என்பதன் இடைக்குறை. அவற்றுள் முன்னது முல்லை நிலம், 'கானப்பேர்த் தலம்' முல்லை நிலத்தில் உள்ளது' என்றபடி பின்னது கற்பு, 'கற்பு நலம்' என்பது அதனையுடைய பெண்ணை - கங்கா தேவியைக் குறித்தது. "மாதேவா" இரண்டில் முன்னது இருமொழித்தொடர். 'பெண்ணே, வா' என்பது அதன் பொருள் பின்னது சிவபிரானை 'மாதேவா' என விளிக்கும் விளி. இவற்றுள் பின்னின்ற "மாதேவா" என்பதை முதலிற் கொள்க. "என்னும்; என்னும்" என்பன தன்னை யறியாமலே பலவற்றைச் சொல்லுதல். 'வாய்சோர என்னும்' என இயைக்க. இவளை நீ, 'நலம் சேர்மாத, வா' என்று அழைத்து, நின் வளர் கொன்றை காரணமாக வளை சோர்தலை நீக்கு' என முடிக்க. "கொன்றை" என்பதில் தொக்கு நின்ற 'ஆன்'உருபு. 'அது காரணமாக' என்னும் பொருளது. தன்வினை, பிறவினை இரண்டிற்கும் பொதுவாம் "சோரல்" என்பது இங்குப் பிறவினைக்


1. திருமுறை- 6.19.1.