608. | வளையாழி யோடகல மால்தந்தான் என்னும் வளையாழி நன்னெஞ்சே, காணில், - வளையாழி வன்னஞ்சைக் கண்டமரர் வாய்சோர வந்தெதிர்ந்த வன்னஞ்சக் கண்டன் வரில். | | 52 |
609. | வரிநீல வண்டலம்பு மாமறைக்காட் டங்கேழ் வரிநீர் வலம்புரிகள் உந்தி - வரிநீர் இடுமணல்மேல் அந்நலங்கொண் டின்னாநோய் செய்தான் இடுமணல்மேல் ஈசன் எமக்கு. | | 53 |
610. | அக்காரம்; ஆடரவம் நாண்;அறுவை தோல்;பொடிசாந்(து) அக்காரந் தீர்ந்தேன்; அடியேனுக்(கு) - அக்காரம் |
கண் வந்தது. இது தோழி மாலை யிரந்தது. "முலைநலஞ்சேர்" என்னுந் தொடர் மீள மீளவந்து, பொருள் வேறுபட்டது சொற்பின்வருநிலையணி 608. குறிப்புரை: 'ஆழிநன்னெஞ்சே, வளை ஆழி வன்னஞ்சைக் கண்டு அமரர்வாய்சோர வந்து எதிர்ந்த வன்னஞ் சக்கு அண்டன்காணில் ஆழி வளையோடு அகல மால் தந்தான்; வரில்வளை' - என்னும் - என இயைத்து முடிக்க. "ஆழி" மூன்றில் முதலது மோதிரம்; இடையது, துன்பத்துள்ஆழ்தலை யுடையது, இறுதியது கடல், "வளை" மூன்றில் முதலது மோதிரம்; இடையது, துன்பத்துள் ஆழ்தலை யுடையது, இறுதியது. கடல், "வளை"முன்றில் முதலது வளையல் இடையது, "வளைத்துக்கொள்" என முற்று, இறுதியது 'வளைந்த' (பூமியைச்சூழ்ந்த) என வினைத் தொகை. காணில் -காட்சியளவில் வன்னம் - ஒளி. சக்கு (சட்சு) - கண்,ஒளியான கண் - 'ஞாயிறு திங்கள், தீ' என்பனவாய் அமைந்த கண்கள். அண்டன் - தேவன் 'வந்தெதிர்ந்த அண்டன்' என்க. என்னும் - என்று என் தோழிபிதற்றுகின்றாள். இது தலைவியை ஆற்றுவிக்கும்தோழி கூறியது. 609. குறிப்புரை:ஈற்றடியை முதலிற் கொள்க.அந்த அடியில், "மேல் ஈசன்" என்பது 'மேலாயசிவன்' என்னும் பொருளது, இடும் அணல் ஈசன் - (எமக்குஎல்லாவற்றையும்) தருபவனாகிய ஈசன்; 'இது பொழுதுநோய் செய்தான்' என்பதாம். "வரி" மூன்றில்முன்னது அழகு. இடையது, கீற்று இறுதியது 'வாரி' என்பதுகுறுகிநின்றது, வாரி - கடல். "நீர்" இரண்டில்முன்னது நீர்மை; பின்னது தண்ணீர். அம் நலம் -அழகினால் உண்டாகின்ற இன்பம். 'இடு மணல் மேல்நலங் கொண்டான்' என்பது கைக்கிளைத் தலைவி தான்கண்ட கனவைத் தோழிக்குக் கூறியது. 610.குறிப்புரை: முதல் அடியில் உள்ள"அக்கு" - எலும்பு ஆரம் - ஒளிமணிவடம். நாண் -அரைநாண். அறுவை - துணி; உடை
|