பக்கம் எண் :

475சிவபெருமான் திருவந்தாதி

பண்டரங்கன், எந்தை, படுபிணஞ்சேர் வெங்காட்டுப்
பண்டரங்கன், எங்கள் பவன்.

54

611.பவனடிபார்; விண்,நீர், பகலோன், மதி,தீப்,
பவனஞ்சேர் ஆரமுதம்; பெண்ஆண்; - பவனஞ்சேர்
காலங்கள் ஊழி அவனே; கரிகாட்டில்
காலங்கை எந்தினான் காண்.

55

612.காணங்கை இன்மை கருதித் கவலாதே
காணங்கை யாற்றொழுது; நன்னெஞ்சே, - காணங்கை
பாவனையாய் நின்றான், பயிலும் பரஞ்சோதி
பாவனையாய் நின்ற பதம்.

56


பொடி - சாம்பல். சாந்து - சந்தனம். 'ஆரம் அக்கு;நாண் அரவம்; அறுவை தோல்; சாந்து பொடி' - என்க.இரண்டாம் அடியில் உள்ள அக்காரம் - அந்த வெறுப்பு.அஃதாவது, 'மாலை எலும்பு, சாந்து சாம்பல்' என்பனபோல இகழ்தல். 'காரம் தீர்ந்தேன் ஆகையால்,அடியேனுக்கு அவன் அக்காரம் (சருக்கரை) என்க."சாந்து" என்பதன்பின், 'என்னும்' எனஒருசொல் வருவிக்க. "பண்டரங்கன்" இரண்டில்முன்னது, ஒருவகைக் கூத்து. பின்னது, பழமையான நடனஅரங்கம். 'வெங்காடாகிய பழைய அரங்கிணைஉடையவன்' என்க. "பவன்" என்பது சிவபெருமானதுதிருப்பெயர்களுள் ஒன்று..

611.குறிப்புரை: கரி காடு -கரிந்த காடு; சுடுகாடு, "கால் அங்கைஏந்தினான்" என்றது, 'ஊர்த்துவ தாண்டவம் ஆடினான்' என்றபடி. "அவனே" என்பதை இதன்பின்பின்னும் முதல் அடியில் "பவனடி" ஒழிந்தவற்றை அதற்குப் பின்னும் கூட்டி, "காண்" என்பதை அசையாக்கியும், "பவன் அடி பார்" என்பதை வேறுமுடிபாக வைத்தும் உரைக்க. பவன் - சிவன்சிவபெருமான் அனைத்துப் பொருள்களும் தானாகியும்,பூமியே திருவடியாகக் கொண்டும் விளங்குதலைக்கூறியவாறு. இரண்டாம் அடி முதற்கண் உள்ள பவனம், தேவலோகம், ஈற்றில் உள்ள பவனம், மேடம், இடபம்முதலிய இராசிகள்.

612.குறிப்புரை: காணம் -பொற்காசு. கவலாது - கவலைப் படாமல். ஏகாரம்,தேற்றம். 'அங்கையால் தொழுது காண்' என மாற்றுக.காண் நங்கை - தன்னைக் கண்டு வழிபட்ட உமாதேவி. 'அவள்பாவிக்கப்படும் பொருளாய் நின்றான்' என்க. ஈற்றடியில் உள்ள "பாவனை" என்பதை, 'பா + வனை' என பிரிக்க. பா - பாமாலை. வனைதல் - ஆக்குதல். 'பதத்துக் கண்' என ஏழாவது இறுதிக்கண் தொக்கது. நின்ற பதம் - நிலையான பாதங்கள். நிலையாவது, அடைந்தார் பின் நீங்காமை.