பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை478

618.ஆளானம் சேர்களிறும், தேரும், அடல்மாவும்
ஆளானால் ஊரத்தான் ஏறூறூர்ந்தே - ஆளான்பொய்;
நாடகங்க ளாட்டயரும் நம்பன் திருநாமம்
நாடகங்கள் ஆடி நயந்து.

62

619.நயந்தநாள் யானிரப்ப நற்சடையான் கொன்றை
நயந்தநாள் நன்னீர்மை வாட - நயந்தநாள்
அம்பலகலஞ் செற்றான் அருளான்; அநங்கவேள்
அம்பலகம் பாயும் அலர்ந்து.

63


முதலடியின் முதலில் 'இலவு' என்பது உகரம் இன்றிவந்தது. இலவ மலர், சிவப்பு நிறம் உடையது. ஆதலின்சேவடிக்கு உவமையாயிற்று. இரண்டாம் அடியில் உள்ள"இலம்" - இல்லம்; அஃதாவது குடிமை, அலர் ஆதல் -பழிச் சொல்லுக்கு உள்ளாதல். 'தோழியர்க்குஉரையாமலே யான் வெண்டலையர்க்கு ஆளாய்அளவளாவினேன்; அதன்மேலும் நமது குடி பழிச்சொல்லுக்கு உள்ளாவதாயினும் ஆகுக. சேவடியார்(இறைவர்பால்) தூது ஏகப்பெறாரோ? (பெற்றால் யாதும்உய்வேன்.) யாவரும் பிறர் தூற்றும் பழியைஇலமாவோம்' என இயைத்து முடிக்க. இதுவும் மேலைத்துறை.

618.குறிப்புரை: ஆளான் அஞ்சுஏர் களிறு - மனிதரால் அஞ்சப்படுகின்ற, அழகியயானை. மா - குதிரை. ஆள் ஆனார் - தனக்கு அடியர்ஆயினார். பொய் ஆளான் - ஒரு ஞான்றும் பொய்யைப்பயன்படுத்தாதவன்; 'வாய்மையையே உடையவன்'என்றபடி. நாடகங்கள் - பலவகை நடனங்கள். நாடுஅகங்கள் - நினைக்கின்ற மனங்கள். ஆடி - கண்ணாடிபோலத் தூய்மையைப் பெறும். 'ஆடி ஆம்' என ஒருசொல்வருவிக்க, நயந்து - விரும்பி. நயந்து 'நாடு அகங்கள்'எனக் கூட்டுக. 'ஏறூருந் தாளான்' என்பது பாடம் அன்று.

தான்நாளும் பிச்சை புகும்போலும்,தன் அடியார்
வான்ஆள, மண்ஆள வைத்து

என நக்கீர தேவரும்1 அருளிச் செய்தார்.

619.உரை: நய் அந்த நாள்நன்னீர்மை வாட - வருந்து கின்ற அந்த நாட்களில்எனது நல்ல அழகெல்லாம் வாடிப் போதலால், நய்அந்த நாள் நற் சடையான் கொன்றை யான் இரப்ப -இறந்துபடுகின்ற இறுதி நாள் வந்தது போன்றநிலையில் யான் நல்ல சடைகளையுடைய சிவபெருமானதுகொன்றை மாலையை இரக்கவும், நயந்த நாள் அம்பகல் அம் செற்றான் அருளான் -


1. கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி - 53.