பக்கம் எண் :

479சிவபெருமான் திருவந்தாதி

620.அலங்காரம் ஆடரவம், என்பு;தோல் ஆடை;
அலங்கார வண்ணற்(கு) அழகார் - அலங்காரம்
மெய்காட்டும் வார்குழலார் என்னாவார்! வெள்ளேற்றான்
மெய்காட்டும் வீடாம் விரைந்து.

64

621.விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னா
விரையார் பொழிலுறந்தை மேயான், - விரையாநீ(று)
என்பணிந்தான் ஈசன் இறையான், எரியாடி
என்பணிந்தான் ஈசன் எனக்கு.

65


அவனைக் கண்டு நான் விரும்பிய நாளாகிய அழகியநாளில் எனது அழகை அழித்துச் சென்றவன் அதனைஎனக்கு ஈயவில்லை. அநங்க வேள் அம்பு அலர்ந்தஅகலம் பாயும் - காமவேளது அம்புகள் எங்கும் பரந்துவந்து என் மார்பிற் பாயாநின்றன; (யான் இனிச்செய்வது என்!)

'நை' என்பது, 'நய்' எனப்போலியாய் வந்தது. "அந்த" இரண்டில் பின்னதுசுட்டு; முன்னது 'அந்தம்' என்பதன் புணர்ச்சிவிகாரம். இதுவும் கைக்கிளைத் தலைவி ஆற்றாமைகூறியது.

620.குறிப்புரை: "அலங்காரம்" மூன்றில், முதலது அலங்கு ஆரம் -(மார்பில்) அசையும் மாலைகள். அவை அரவமும்,எலும்புமாம். இடையது அழகு. வண்ணற்கு - நிறத்தையுடையவன் (சிவபெருமான்) பொருட்டாக. அழகு ஆர்அலங்கு ஆர மெய் காட்டும் வார் குழலார் - தங்களதுமேனி யழகு, நிறைந்த ஒளியை வீசுகின்ற முத்தின்நிறத்தைக் காட்டி நிற்கும் நீண்ட கூந்தலையுடையமகளிர் ('உடல் வெளுத்துப் போன மகளிர்'என்றதாம்.) இனி என்னாவாரே! (இவர்கட்கு இனி)ஏற்றான் மெய்காட்டும் வீடு விரைந்து ஆம் - இடபவாகனத்தையுடையவன் தனது உண்மையை விளங்குகின்றவீடு விரைவில் கிடைத்துவிடும்போலும்!('இறந்துபடுவர் போலும்' என்றபடி.)

621.குறிப்புரை: விரை ஆர் புனல் - விரைந்த(வேகமாய்) ஆர்க்கின்ற (ஒலிக்கினற) நீர்.பொன்னாவிரை - பொன் போலும் ஆவிரம் பூ. ஆர் -நிறைந்த. உறந்தை - உறையூர்; முக்கீச்சரம். நீறுவிரையா அணிந்தான் - திருநீற்றை வாசனைபொருந்திய சந்தனமாக அணிந்தவன். 'விரைவாக'என்றதற் கேற்ப, 'மாலையாக' என்பது வருவித்து,'மாலையாக என்பை அணிந்தான்" என்க. ஈற்றடியில்"ஈசன்" என்பது அவன்' எனச் சுட்டளவாய் நின்ற'அவன் எனக்குப் பணிந்தான்; என்' - என்க. எனக்கு -என் அளவிற்கு. பணிந்தான் - இறங்கி வந்து அருள்செய்தான். என் - என்ன வியப்பு.