622. | எனக்குவளை நில்லா, எழிலிழந்தேன்' என்னும் எனக்குவளை நில்லாநோய் செய்தான்? - இனக்குவளைக் கண்டத்தான், நால்வேதன், காரோணத் தெம்மானைக் கண்டத்தால், நெஞ்சே,காக் கை. | | 66 |
623. | காக்கைவளை என்பார்ப்பார்க் கன்பாய்ப்பால் நையாதே காக்கைவளை யென்பார்ப்பான் ஊர்,குரக்குக் - காக்கைவளை ஆடானை ஈருரியன் ஆண்பெண் அவிர்சடையன் ஆடானை யான(து) அமைவு. | | 67 |
622.குறிப்புரை: இனக் குவளைக்கண்டத்தான்.... எம்மானைக் கண்ட அத்தால், (அவன்)நக்கு, வளை நில்லா நோய் என் செய்தான்? (இவள்)'எனக்கு வளை நில்லா; எழில் இழந்தேன் என்னும்;(இனி இவளைக் காக்கை நெஞ்சே' என இயைத்து உரைக்க.இனக் குவளைக் கண்டத்தான் - கூட்டமானநீலோற்பலப் பூப்போலும் கரிய கண்டத்தையுடையவன். கண்ட அத்தால் - அவனைக் கண்ட அதனாலே,'கண்ட' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.'அதனால்' என்பது 'அத்தால்' என மருவிற்று. நக்கு -சிரித்து; 'அன்பு காட்டி' என்றபடி வளை நில்லாநோய் - தாழ்ந்து நில்லாது உயர்ந்து எழுகின்றநோய், காக்கை - காத்தலைச் செய்வது. நெஞ்சுகாத்தலாவது, அவனை நினையாது மறத்தல், என்னும் -என்று சொல்லி இரங்குகின்றாள். 623.உரை: முதலடியில்"காக்கைவளை" என்பதை, 'கை வளை கா' எனமாற்றுக. "கா" - கழன்று வீழாமல் காப்பாற்று.ஏவல் வினைமுற்றின்முன் வல்லொற்று மிக்கது, என்பு- என்றல்; புகர ஈற்றுத் தொழிற் பெயர். என்புஆர்ப்பார்க்கு அன்பாய் - என்பதாகச் சொல்லஆரவாரிக்கின்றவர்கள் மேல் அன்பாய். தலைவிதன்னைப் பிறர்போலக் கூறினாள் ஆதலின்,"ஆர்ப்பார்" எனப் பன்மையாற் கூறினாள்;பால் நையாது - அவர்கள்பால் மனம் இரங்காமல்ஏகாரம் தேற்றம். காக்கை வளை என்பு ஆர்ப்பான் -காக்கைகள் சூழ்கின்ற எலும்புகளை ('புறங்காட்டில்உள்ள எலும்புகளை' என்றபடி) மாலையாக அணிந்தவன்;சிவபெருமான். "குரக்குக் கா" என்பதும்ஈற்றடியில் உள்ள "ஆடானை" என்பதும்தலங்கள். கை வளை ஆடு ஆனை ஈர் உரியன் - தும்பிக்கைவளைந்து அசைகின்ற யானையை உரித்த தோலையுடையவன். ஆண் பெண் - ஆணும் பெண்ணுமாய உருவம்உடையவன். அமைவு - பொருத்தம். 'காதல் மிக்குமெலிகின்ற மகளிர், - எங்கள் கை வளைகளைக் கா -என்று முறையிடுகின்றவர்கள்மேல் அன்பாய்,அவர்பால்இரக்கங் கொள்ளாமலே சிவன்குரக்குக்கா, ஆடானை ஆகிய தலங்களில் வாளா அமர்ந்திருத்தல் பொருந்துவதொன்றே' எனத் தலைவிஇரங்கினாள். 'பொருந்துவது' என்றது எதிர்மறைக்குறிப்பு.
|