பக்கம் எண் :

481சிவபெருமான் திருவந்தாதி

624.அமையாமென் தோள்மெலிவித்(து) அம்மாமை கொண்டிங்
கமையாநோய் செய்தான் அணங்கே, - எமையாளும்
சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன்,
சாமத்தன் இந்நோய்செய் தான்.

68

625.தானக்கன், நக்க பிறையன், பிறைக்கோட்டுத்
தானக் களிற்றுரியன், தண்பழனன் . தானத்
தரையன், அரவரையன் ஆயிழைக்கும், மாற்கும்
அரையன் உடையான் அருள்.

69

626.அருள்நம்பாற் செஞ்சடையன், ஆமாத்தூர் அம்மான்,
அருள்நம்பால் நல்கும் அமுதன், - அருள்நம்பால்
ஓராழித் தேரான் எயிறட்ட உத்தமனை,
ஓராழி நெஞ்சே, உவ.

70


624.குறிப்புரை: அமை -மூங்கில். அம் மாமை - அழகிய, மாந்தளிர்போலும்நிறம், அமையா நோய் - தீரா நோய், சாமத்த -சாமவேதம் பொருந்திய. 'சாமத்தனாய்' என ஆக்கம்விரிக்க. சாமத்தன் - இடாயாமத்திலே வந்தவன்."அணங்கே" எனத் தோழியை தலைவிவிளித்தாள். ஆகவே, இது தோழியைத் தூது செல்லவேண்டிக்கொண்ட தலைவி கூற்றாயிற்று.

625.குறிப்புரை: 'தான் +நக்கன்' எனப் பிரிக்க. நக்கன் -உடையில்லாதவன்; திகம்பரன்; திக்குகளையேஆடையாக உடையவன். நக்க பிறையன். ஒளி வீசுகின்றபிறையை அணிந்தவன். கோடு - தந்தம், தானக் கயிறு -மத நீரை யுடைய யானை. தானத்து அரையன் - தானம்செய்தற்கு வேண்டப் படும் சற்பாத்திரங்களுள்முதலாவதானவன். 'சிவனை நோக்கிச் செய்யும்தானங்களை விடச் சிறந்த தானம் பிறிதில்லை'என்றபடி. ஆயிழை - உமை. மால் - மாயோன். அரையன் -இவர்களைப் பாதி உடலிற் கொண்டவன் 'அருள்உடையான்' எனமாற்றி, 'இங்ஙனம் கூறப்பட்ட இவன்உயிர்கள் மாட்டுப் பேரருள் உடையவன்' என்க.

626.குறிப்புரை: முதலடியிலும்இரண்டாம் அடியீற்றிலும்உள்ள "அருணம்" -சிவப்பு. அஃது ஆகுபெயராய், முதற்கண்நெருப்பினையும், பின்னர் சூரியனது கிரணங்களையும்குறித்தன. பால் - பன்மை; தன்மை. ஆமாத்தூர்.ஒருதலம். இரண்டாம் அடியில் உள்ள"அருணாம்பால்" என்பதை, 'அருள் + நம்பால்'பிரித்து உரைக்க. 'ஆழி நெஞ்சே ஓர்; உவ' எனமாற்றி, 'துன்பத்தில் ஆழ்கின்ற நெஞ்சே நினை;அதன் பயனாக மகிழ்ச்சியடை' என உரைக்க.