627. | உவவா நறுமலர்கொண்(டு) உத்தமனை உள்கி உவவா மனமகிழும் வேட்கை - உவவா(று) எழுமதிபோல் வாள்முகத்(து) ஈசனார்க் கென்னே; எழுமதிபோல் ஈசன் இடம் | | 71 |
628. | இடமால்; வலமாலை வண்ணமே; தம்பம் இடமால் வலமானஞ் சேர்த்தி - இடமாய மூவா மதிபுரையும் முன்னிலங்கு மொய்சடையான், மூவா மதியான் முனி. | | 72 |
629. | முனிவன்,மால் செஞ்சடையான், முக்கணான் என்னுமர் முனிவன்மால் செய்துமுன் நிற்கும்; - முனிவன்மால் போற்றார் புரமெரித்த புண்ணியன்தன் பொன்னடிகள் போற்றாநாள் இன்று புலர்ந்து. | | 73 |
627.குறிப்புரை: 'ஈசனார்க்குஈசன் இடம், உத்தமனை மலர் கொண்டு உள்கி மகிழும்வேட்கை எழுமதி போல் என்' என இயைத்து முடிக்க.ஏகாரம் தேற்றம். "உத்தமன்" என்பது"ஈசனார்" எனப்பட்டவனையே குறித்தலால்'அவன்' என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. உவவாஉள்கி - மகிழ்ந்து நினைத்து, இரண்டாம் அடியில்'உவ்வவா' என்பது வகரமெய் குறைந்து "உவவா" எனவந்தது. உகரம் சுட்டு. 'உந்த அவாவால் மனம்மகிழ்கின்ற வேட்கை எழும் மதி' என்க. மதி -புத்தி. உவவு ஆறு - உவா நாளில் (பௌர்ணிமையில்)எழுகின்ற திங்கள். என் - என்று அறி, ஈற்றடியில்உள்ள ஈசன் - தலைமை; 'ஈசனார்க்கு, நறுமலர் கொண்டுஉள்கி மகிழும் வேட்கை எழுகின்ற புத்தியேசிறப்புடைய இடம்' என்றபடி. உயர்த்தற் கண்ஒருமையோடு பன்மை மயங்கிற்று. 628.குறிப்புரை: முதல் அடியில்,இடம் - இடப்பக்கம். மால் - மாயோன், மாலை -அந்தி வானம். தம்பம் இட - நிலைநிற்றலை இடும்படி.மால் வல மான் அம் சேர்த்தி - மருளுதலை மிக உடையமானை அழகாக ஏந்தி. 'அதற்கு (மதிக்கு) இடமாய சடை'என இயைக்க. புரைய - உயர்ந்து விளங்க, மூவா மதியான்- கெடாத அறிவை உடையவன்; 'நித்தியன்' என்றபடி.முனி - தவக் கோலத்தையுடையவன். இடப்பக்கத்தில்மாயோனை உடையனாய் இருத்தல் முதலிய வற்றைக் கூறி,இறுதியில் அவனது தவக்கோலத்தைப் புகழ்ந்தவாறு. 629.குறிப்புரை: முனிவன் - தவக்கோலத்தை யுடையவன். மால் - சடை - பெரிய சடை.என்னும் - என்ற சொல்வாள். முனி வன்மால் செய்து -யாவரும் வெறுத் தற்குரிய வலியமையலைக்
|