630. | புலர்ந்தால்யான் ஆற்றேன்; புறனுரையும் அஃதே புலர்ந்தானூர் புன்கூரான் என்னும்; - புலர்ந்தாய மண்டளியன் அம்மான் அவர்தம அடியார்தம் மண்டளியன் பின்போம்' மனம். | | 74 |
631. | மனமாய நோய்செய்தான்; வண்கொன்றை தாரான்; மனமாய உள்ளார வாரான்; - மனமாயப் பொன்மாலை சேரப் புனைந்தான்; புனைதருப்பைப் பொன்மாலை சேர்சடையான் போந்து. | | 75 |
கொண்டு. முன் நிற்கும் - அவன் எதிரில் போய்நிற்பாள். முனிவன்மால் போற்றார் - கோபிக்கின்ற, வலிய அஞ்ஞானத்தையுடைய பகைவர். அடிகள்போற்றா நாள் இன்று. பாதங்கள் இவளைக்காப்பாற்றாது கைவிட்ட நாளாகிய இன்று புலர்ந்து -மெலிந்து 'இவள்' என்னும் எழுவாய் வருவித்து, 'இன்றுபுலர்ந்து என்னும், நிற்கும்' - என முடிக்க. இதுதலைவியது ஆற்றாமை கண்டு செவிலி நொந்து கூறியது. 630.குறிப்புரை: இரண்டாம்அடியில் தனிச்சீர் முதலாகத்தொடங்கி யுரைக்க.'கல் தளி', 'கற்றளி' ஆதல்போல், 'மண் தளி','மண்டளி' யாயிற்று. 'மண்ணால் (சுடுமண்ணால் -செங்கற்களால்) ஆகிய கோயில்' - என்பது பொருள்.பல கோயில்கள் இவ்வாறு அமைந்தன. 'திருவாரூர்ப்பரவையுள் மண்டளி' - என்பதும் எண்ணற்பாற்று.இங்குக் குறிக்கப் பட்டதும் அதுவேயாகலாம்.புலர்ந்து ஆய மண் - சுடப்பட்டு அமைந்த மண்.ஈற்றடியில் 'மண்டு + அளியன் - எனப் பிரித்து,'மிக்க அன்பில் விளங்குபவன்' என உரைக்க.'அம்மானவன்' என்பதில் 'அவன்', பகுதிப் பொருள்விகுதி. (பொழுது, பயனின்றி வீணே) வீணேவிடியுமாயின். புறன் உரை - அலர். அஃதே - முன்னிருந்தநிலையினதே. 'புல் ஆர்ந்த ஆன்' என்பதில்"ஆர்ந்த" என்பது முதல் குறுகியும், ஈற்று அகரம்தொகுக்கப்பட்டும் நின்றது - 'புல்லை உண்கின்றஇடபம்' - என்பது பொருள். புன்கூர் - திருப்புன்கூர்த்தலம், 'மனம் என்னும்' என முடிக்க. என்னும் - என்றுபதைக்கும். கைக்கிளைத் தலைவி கூற்று. 631.குறிப்புரை: இரண்டாம்அடியின் தனிச் சீரில் "மனமாய" என்பதை,'மன் ஆம் ஆய் ஆ' எனப் பிரித்து, 'நிலை யான அழகாகஅந்த' எனப் பொருள் கொண்டு, 'அப் பொன் மாலை' எனஇயைத்து, 'அந்தப் பொன்போலும் கொன்றை மாலையை'என உரைக்க. ஈற்றடியில் உள்ள மாலை - தன்மை.'தருப்பை பொன் மாலை' என்பதை, பொன் தருப்பைமாலை' என மாற்றி,
|