632. | போந்தார், புகவணைந்தார்; பொன்னேர்ந்தார்; பொன்னாமை போந்தார் ஒழியார் புரமெரித்தார்; - போந்தார் இலங்கோல வாள்முகத்(து) ஈசனார்க்(கு) எல்லே இலங்கோலந் தோற்ப தினி. | | 76 |
633. | இனியாரும் ஆளாக எண்ணுவர்கொல்! எண்ணார், இனியானஞ் சூணிருக்கைக் குள்ளான், - இனியானைத் தாளங்கை யாற்பாடித் தாழ்சடையான் தானுடைய தாளங்கை யால்தொழுவார், தாம். | | 77 |
'பொன்னாலாகிய தருப்பையின் தன்மையை உடையசடை' என்க. மனம் மாய நோய் செய்தான் - மனம்அழியும்படி துன்பத்தை உண்டாக்கினான். தாரான் -தரமாட்டான். மனம் ஆய உள்ஆர வாரன் - எனதுமனநிலையை உள்ளபடி உணர்தற்கு என்இருப்பிடத்தினுள்ளும் வரமாட்டான். 'என் செய்வது'என்பது குறிப்பெச்சம். இதுவும் மேலைத் துறை. 632.குறிப்புரை: "புரம்எரித்தார்" என்பதை முதலிற் கொள்க.போந்தார் - வீதி வழியே வந்தார். புக அணைந்தார்- என் இல்லத்துள் புகுவார் போல அணுகிவந்தார்.பொன் நேர்ந்தார் பெற்றோர்க்குப் பொன்தரவும் இசைந்தார் (ஆயினும்) பொன் ஆம் ஐ போம்தார் ஓழியார் - பொன் போலும் அழகு பொருந்தியகொன்றைமாலையை விடார்; (தாரார்) போந்தார் -மறைந்துவிட்டார். எல்லே, இரக்கச் சொல், இனி,'எல் - பகல்' எனக் கொண்டு, 'எல்லே போந்தார்' எனமேலே கூட்டி உரைப்பினும் ஆம் மூன்றாம் அடியில்"இலங்கு ஓலம்" என்பதை 'ஓலம் இலங்கு' எனமாற்றி, 'பலரது முறையீடுகளை யுடைய முகத்தை யுடையஈசனார்' என்க. ஈசனார்க்கு - ஈசனார் பொருட்டு.கோலம் தோற்பது இனி இலம் - அழகை இழப்பதை இனியாம் செய்யமாட்டோம். இஃது அருளாமை நோக்கி ஊடியுரைத்தாள் கூற்று. 633.குறிப்புரை: இரண்டாம் அடிமுதலாகத் தொடங்கி, "தாம்" என்பதை,"ஆளாக" என்பதற்கு முன்னே கூட்டி யுரைக்க.இனியா நஞ்சு - இனிப்பை (விருப்பத்தை) உண்டாக்காதநஞ்சு. நஞ்சு ஊண் இருக்கைக்கு உள்ளான் இனியான் -நஞ்சினை உண்டு, அதனை உள்ள அடக்கி யதனால் தானும்அதுவே போன்று இனித்தல் இல்லாதவன். 'கையால்தாளம் பாடி' - என மாற்றி, 'தாளத்தோடு' என உருபுவிரிக்க. முதல் அடியில், "இனி" என்றது, 'அவன்சிறிதும் அருளான் ஆனபின்பு' என்றபடி. இஃதுஆசிரியர் ஊடிக் கூறியது. "உங்களுக்கு ஆள் செய்யமாட்டோம்; ஒணகாந்தன் தளியுளீரே" என்றாற்போல்வன காண்க.
|