பக்கம் எண் :

485சிவபெருமான் திருவந்தாதி

634.தாமரைசேர் நான்முகற்கும், மாற்கும் அறிவரியார்,
தாமரைசேர் பாம்பர், சாடமகுடர், - தாமரைசேர்
பாணியார், தீர்ந்தளிப்பர் பாரோம்பு நான்மறையார்
பாணியார், தீர்ந்தளிப்பர்; பார்.

78

635.பார்,கால்,வான், நீர்,தீப், பகலோன், பனிமதியன்
பார்கோல மேனிப் பரனடிக்கே - பார்கோலக்
கோகரணத் தானறியக் கூறுதியே! நன்னெஞ்சே
கோகரணத் தானாய கோ.

79

636.கோப்பாடி ஒடாதே; நெஞ்சே மொழி; கூத்தன்
கோப்பாடிக் கோகரணங், குற்றாலம்; - கோப்பாடிப்
பின்னைக்காய் நின்றாற்(கு) கிடம்கொடுக்கும் பேரருளான்
பின்னைக்காம், எம்பெருமான் பேர்.

80


634.குறிப்புரை: தாம் அரைசேர் பாம்பர் - (நான்முகற்கும், மாற்கும்அரியாராகிய) அவர் தமது இடையிலே (கச்சாகச்)சேர்ந்த பாம்பினை உடையவர். தா மரைசேர்பாணியார் - தாவுகின்ற மான் பொருந்திய கையைஉடையவர். தீர்ந்து அளிப்பர் பார் ஓம்பு - பாசம்நீங்கி, அது நீங்காதாரை ஆள்பவர்களது தூய உலகத்தை(சுத்த மாயா புவனங்களை)க் காக்கின்ற(பரமசிவனார்) பாணித்தல் - தாமதித்தல்.பாணியார் - தாமதியாராய் தீர்ந்து அளிப்பர் -விரைந்து தமது உலகத்தினின்றும் நீங்கி வந்துஅருள் வழங்குவார்' பார் - இதனை (நெஞ்சே) நீஅறிவாயாக.

635.குறிப்புரை: முதல் அடியில்அட்ட மூர்த்தங்களில்இயமானன் (ஆன்மா) தவிர,ஏனைய ஏழும் கூறப்பட்டன. இரண்டம் அடியில், 'பார்மேனி' என இயைத்து, 'பார்க்கத் தக்க திருமேனி' எனஉரைக்க. தனிச்சீரில் உள்ள பார் - நில உலகம் -கோகரணம், துளுவ நாட்டுத் தலம். ஆன் - அவ்விடம்'அவ்விடத்துச் சென்று' என்க. ஈற்றடியில், கோகு -ஆகாயம். கரணம் - உடம்பு. ஆகாயம் போலும் உடம்பைஉடைய கோ (தலைவன்) அநங்கன்; மன்மதன் என்றது,அவனால் உண்டாகின்ற துன்பம், 'நெஞ்சே, கோகரணத்தான் ஆய கோவினால் உண்டாகின்றதுன்பத்தைப் பரனடிக்கே கூறுதியோ' என இயைத்துமுடிக்க. கூறுதல் - விண்ணப்பித்தல். இதுவும்கைக்கிளைத் தலைவி கூற்று.

636.குறிப்புரை: 'நெஞ்சே,கோப்பாடி ஓடாதே' என மாற்றி முதலிலும், 'கூத்தன்'கோப்பாடிக் கோகரணம், குற்றாலம் கூறு' என மாற்றி,இறுதியிலும் வைத்து உரைக்க கோப்பாடி ஓடாதே -அரசரைப் பாடிக்கொண்டு அவர்கள் பால் ஓடாதே.'கோ' என்பது