639. | பட்டாரண் பட்டரங்கன், அம்மான், பரஞ்சோதி, பட்டார் எலும்பணியும் பாசுபதன் - பட்டார்ந்த கோவணத்தான், கொல்லேற்றன் என்றென்று நெஞ்சமே, கோவணத்து நம்பனையே கூறு. | | 83 |
640. | கூற்றும், பொருளும்போற் காட்டி,யெற் கோல்வளையைக் கூற்றின் பொருள்முயன்ற குற்றாலன் - கூற்றின் செருக்கழியச் செற்ற சிவற்கடிமை, நெஞ்சே, செருக்கழியா முன்னமே செய். | | 84 |
641. | செய்யான், கருமிடற்றான், செஞ்சடையான், தேன்பொழில்சூழ் செய்யான், பழனத்தான், மூவுலகும் - செய்யாமுன் |
பொருட்டு. அறு குணங் களாவன ஐசுவரியம், திரு, புகழ்,ஞானம், வீரம், வைராக்கியம்' என்பன. (திருவாவதுநன்மை) இது 'பகவர்' என வருதல் பெரும்பான்மை."முக்கோர்ற்பகவர்"1 முதலியன காண்க. பகர் -(அவன் பெயர்களைச்) சொல், 'மனமே, பாசுபதன் பாதம்பணிய ஆசைக்கட்பட்டு, ஐந்து அடக்கிய பகர்' எனஈயைத்து முடிக்க. 639.குறிப்புரை: பட்டார் அண் -அன்பு பட்டவர் அணைகின்ற. பட்ட அரங்கன் - பெயர்பெற்ற அம்பலவன். (அகரம் தொகுத்தல்) பட்டார்எலும்பு - இறந்தவர்களது எலும்பு, பட்டு ஆர்ந்தகோவணத்தன் - பட்டு இழைகள் பொருந்தியகோவணத்தை அணிந்தவன். கோ வண்ணத்து நம்பன் -ஆகாயத்தை வடிவமாக உடைய பழையோன், (ணகர ஒற்றுத்தொகுத்தல் பெற்றது.) 640.குறிப்புரை: எல் கோல்வளை - ஒளி பொருந்தியனவும், ஒழுங்காய்அமைந்தனவும் ஆகிய வளையல்களை அணிந்தவள்;உமாதேவி. (அவளை) கூற்றின் - தனது திருமேனியின் ஒருகூற்றில் இருக்கத்தக்க. பொருள் - பொருளாக,(ஆக்கம் வருவிக்க) கூற்றும் பொருளும் போல் காட்டிமுயன்ற - சொல்லும், அதன் பொருளும்போலப்பிரிவற்றுத்தோன்றும்படி காட்சிப்படுத்துஇருக்கச் செய்த. மூன்றாம் அடியில் 'செரு + கழிய'எனப் பிரித்து, 'போர் ஓழியும்படி' என உரைக்க.இரண்டாம் அடியில் "செருக்கு" என்பது, உடல்வலிமையைக் குறித்தது. 'என் கோல் வளை' என்பதுபாடம் அன்று. 641.குறிப்புரை: முதலடியில்'செய்யான்' - செம்மை நிறத்தையுடையவன். இரண்டாம்அடியில் 'செய்யான்' - செப்பம் (நடுவுநிலைமை)உடையவன்; இதனை, "செஞ்சடையான்"
1. கலித்தொகை - பாலை - 8 நச்சர் உரை.
|