பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை488

நாட்டூணாய் நின்றானை நாடுதும்போய், நன்னெஞசே,
நாட்டூணாய் நின்றானை நாம்.

85

642.நாவாய் அகத்துளதே; நாமுளமே; நம்மீசன்
நாவாய்போல் நன்னெறிக்கண் உய்க்குமே; - நாவாயால்
துய்க்கப் படும்பொருளைக் கூட்டுதும்; மற்றவர்க்காள்
துய்க்கப் படுவதாஞ் சூது.

86

643.சூதொன் றுனக்கனறியச் சொல்லினேன்; நன்னெஞ்சே
சூதன் சொலற்கரிய சோதியான் - சூதின்
கொழுந்தேன் கமழ்சோலைக் குற்றாலம் பாடிக்
கொழுந்தே இழந்தேன் குருகு.

87


என்பதன்பின் கூட்டுக. பழனம் ஒருதலம். செய்யா -படைத்து. முன்நாள் தூணாய் நின்றான் - படைத்தகாலம் முதலாகவே உலகத்தைத் தாங்கி நிலைபெறுத்துவோனாய் நின்றான். நாட்டு ஊனாய் நின்றான் - உலகபோகமாய் நின்றான். பின் இரண்டடிகள்'நாட்டுணாய்' என ஓதுவன பாடம் அல்ல.

642.குறிப்புரை: 'வாயகத்துஉளதே' என மாற்றுக. 'வாழ்த்த நா உளதாகவும், அதைக்கொண்டு நாம் உளேமாகவும், பிறவியாகிய கடலைமரக்கரம் போல நின்று கடப்பித்து, நன்னெறியின்பயனாகிய வீடுபேறாம் கரையை அடைவிக்க இறைவன்இருக்கவும் (நாம் அவனை வாழ்த்து தலைச்செய்யாமல்( வாயில் உள்ள அந்த நாவால் சுவைத்துஉண்ணுதற்குரிய திரட்டுவதிலே காலம்கழிக்கின்றோம். (அது நாம் உய்தற்குரிய உபாயம்அன்று.) இறைவனுக்கு ஆளாகிப் பணிசெய்து அதனால்நுகரப்படும் இன்பத்தை இன்பமாகக் கருதி முயலுதலேஉபாயமாகும்' என்க சூது - உபாயம்.

'கற்றுக் கொள்வன வாயுள; நாவுள;
இட்டுக் கொள்வன பூவள; நீருள;
கற்றைச் செஞ்சடை யானுளன்; நாமுளோம்;
ஏற்றுக் கோ,நம னால்முனி வுண்பதே'.

என்னும் அப்பர் திருமொழியை இங்கு ஒப்பிட்டுக்காண்க.

643.குறிப்புரை: சூது - வஞ்சனை.அஃதாவது தலையளி செய்வான்போலக் காட்டிச்செய்யாது போனமை. சூதன் - சூத முனிவர். இவர் வேதவியாத முனிவர்க்கு மாணூக்கரா யவருள் ஒருவர். தம்ஆசிரியர் பால் கேட்ட புராணங்கள்பதினெட்டினையும் நைமிசாரணிய முனிவர்க்கட்குக்கூறியவர். 'இவரால் சொலற்கரிய' என்றது.'புராணங்களால் முடித்துக் கூறப்படாத புகழ யுடையவன்'