பக்கம் எண் :

489சிவபெருமான் திருவந்தாதி

644.குருகிளவேய்த் தோள்மெலியக் கொங்கைமார் பொல்கிக்
குருகிளையார் கோடு கொடாமே - குருகிளரும்;
போதார் கழனிப் புகலூர் அமர்ந்துறையும்
போதாநின் பொன்முடிக்கட் போது.

88

645.போதரங்க வார்குழலார் என்னாவார்? நன்னெஞ்சே
போதரங்க நீர்கரந்த புண்ணியற்குப் - போதரங்கக்
கானகஞ்சேர் சோதியே கைவிளக்கா நின்றாடும்
கானகஞ்சேர் வாற்கடிமை கல்.

89


என்றபடி. குற்றாலம், ஓருதலம். சூதின் -மாமரத்தின். 'சூதம' என்பது அம்முக குறைந்து"சூது" எனவந்தது. கொழுந்தே கொழுந்து - போலும்கையினின்றே. குருகு - வளையல். இது நெஞ்சினைத் தூதுவிடக் கருதியவள் அதனை நோக்கிக் கூறியது.

644.குறிப்புரை: "கொடாமே" என்பதை இறுதிக்கண் கூட்டி,மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. போது -பூக்கள் புகலூர், ஒருதலம். போதா - ஞான சொரூபனே.பொன்முடிக்கண் உள்ள போது (மலர்( கொன்றை.கொடாமே - கொடாமையாலே, 'குருகு' என்பதுகைவளைக்கப் பெயராயினும் இங்குத் தோள்வளையைக்குறித்து நின்றது. 'மார்பின்கண்' என உருபு விரிக்க.ஒல்கி - தளர்ந்து 'மார்புல்கி' என்பது பாடம் அன்று.குருகு இணையார் - அன்னப் பறவை போலும் இளையமகளிர். 'இணையாது' என ஆறாவது விரித்து, "குருகிளவேய்த் தோள்" என்பதற்கு முன்னே கூட்டுக. கோடு -யானைத் தந்தம். மேற்போந்த கொங்கையைச்சுட்டுவ தாகிய சுட்டினை விரித்து, 'அக்கோடு' என்க.குரு - நிறம்; பொன்னிறம், பசலை, கிளரும் - மிகும்.'ஆதலின் நின் முடிக்கட் போதினைத் தந்தருள்'என்பது குறிப்பெச்சம். இது தோழி தலைவனைமாலையிரந்தது. தன் தலைவியது மெலிவு கூறுவாள்அதனைப் பலர்மேலும் இட்டுப் பொதுப்பட,"இளையார்" என்றாள். 'குருக்கிளரும்'என்பதில் ககர ஒன்று எதுகை நோக்கித்தொகுக்கப்பட்டது.

645.குறிப்புரை: போது அரங்கவார் குழலார் - பூக்களுக்கு அரங்குபோல் உள்ளநீண்ட கூந்தலையுடைய மகளிர். என ஆவார் - அவர்உனக்கு என்ன பயனைத் செய்வார்? இரண்டாம்அடியில், "போ" என்பதைத் தனியே பிரித்து,இறுதிக்கண் கூட்டுக. தரங்கம் - அலை, 'போதுவர்'என்பது உகரம் தொகுத்தலாய் 'போதர்' எனவந்தது.'கொண்டு வரப்பட்டவர்' என்பது பொருள். அங்கம் -உடம்பு. கானகம், முதுகாடு. 'ஆடும் கால்களையுடைய நகம்சேர்வான்' என்க, நகம் - கயிலாய மலை, கல் -கற்றுச் செய். "போ" என்றது. வலியுறுத்தற்பொருட்டு.