பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை490

646.கற்றானஞ் சாடுகா வாலி, களந்தைக்கோன்,
கற்றானைக் கல்லாத நாளெல்லாம் - கற்றான்;
அமரர்க் கமரர் அரர்க்டிமை பூண்டார்
அமரர்க் கமரரா வார்.

90

647.ஆவா மனிதர் அறிவிலரே யாதொன்றும்
ஆவார்போற் காட்டி, அழிகின்றார்; - ஆவா!
பகல்நாடிப் பாடிப் படர்சடைக்குப் பல்பூப்
பகல்நாடி ஏத்தார் பகர்ந்து.

91


646.குறிப்புரை: கற்று ஆன்அஞ்சு ஆடு - கன்றையுடைய பசுவினின்றும் உண்டாகின்றஐந்து பொருள்களில் (பஞ்ச கௌவியங்களில்)முழுகுகின்ற. காவாலி - கபாலி. களந்தை - களத்தூர்.வேட்களம், நெடுங்களம் முதலாக, 'களம்' எனப் பெயர்பெற்ற தலங்கள் பல. கல் தானை - கல்லாடை. தானை -ஆடை. இதனை, "களந்தைக் கோன்" என்பதற்குமுன்னே கூட்டி, 'கோனை' என இரண்டாவது விரிக்க.கல்லாமை - அறியாமை. ஒருவாறு அறியினும் போற்றஅறியாமை, "கல்தான்" என்பதில், "கல்"என்பது உவமையாகுபெயராய் உயிர் இல் பொருளைக்குறித்து, அதற்குரிய காலத்தை யுணர்த்திற்று உயிர்இப்பொருளின் காலம், யாதொரு பயனையும் தராதுசெல்வதாதலையறிக. 'தான்' என்பது தேற்றப்பொருட்டு. அஃறினை பன்மை யொருமை மயக்கம்."அமரர்" நான்கில் முன் இரண்டும்'விரும்புபவர்' எனவும், பின் இரண்டும் 'தேவர்'எனவும் பொருள் தந்தன. அமரர்க்கு அமரர் -விரும்புவோரினும் மேலாய் மிக விரும்புவோர்,'விரும்புவோராய்' என ஆக்கம் விரிக்க. அமரர்க்குஅமரர் - தேவர்கட்கெல்லாம் தேவர்.

647. குறிப்புரை:முதற்கண் 'அவா'என்பது நீண்டு "ஆவா" என வந்தது.'யொதொன்றம் அறிவிலர்' என மாற்றுக.ஆவார்போல் காட்டி அழிகின்றார் - தாங்கள்மேல்மேல் உயர்வது போலக்காட்டி (உலகியலிலேமூழ்கிநின்று, உண்மையில்) அடியோடுஅழிந்தொழிகின்றார்கள். ஆவா - இஃது இரங்கத்தக்கது. மூன்றாம் அடியில், 'பகவன்' என்பது இடைக்குறைந்து, "பகன்" என வந்தது 'பகனை' எனஇரண்டாவது விரித்து, 'பாடி ஆடி' என மாற்றியுரைக்க.'அவனது படர் சடைக்கு' என்க. பகல் நாடி -நாள்தோறும் தேடிக் கொணர்ந்து, தூவி - (அவன்நாமங்களைப்) 'பகர்ந்து ஏத்தார்' என்க.