பக்கம் எண் :

491சிவபெருமான் திருவந்தாதி

648.பகனாட்டம் பாட்டயரும், பாட்டோடாட் டெல்லி
பகனாட்டம் பாழ்படுக்கும்; உச்சி - பகனாட்டந்(து)
ஆங்கால் தொழுதெழுவான் தாழ்சடையான், தம்முடைய(து)
ஆங்கால் தொழுதல் தலை.

92

649.'தலையாலங் காட்டிப் பலிதிரிவர்' என்னும்;
'தலையாலங் காடர்தம்' என்னும்; - தலையாய
பாகீ ரதிவளரும் பல்சடையீர், வல்விடையீர்,
பாகீ ரதிவளரும் பண்பு.

93


648.குறிப்புரை: பகல் நாட்டம்பாட்டு அயரும் - பகற் காலத்தில் அன்பர்கள்பாடும் பாட்டைக் கேட்பதிற் செல்லும். எல்லி -இரவில். பாட்டொடு பொருந்த ஆகுதலைச் செய்யும்.(இங்க 'பகல்' என்பது உலகம் நிலைத்துள்ளகாலத்தையும், 'இரவு' என்பது அஃது ஒடுங்கியகாலத்தையும் குறித்து நின்றன.) பகன் - 'பகன்'என்னும் பெயரை உடைய சூரியன். நாட்டம் - அவனது கண்.நாள் உச்சிப் பகல் தந்து ஆங்கால் - நாளானதுநண்பகலைத் தந்து பொருந்தும் பொழுது. (அஃதாவது,உச்சி வேளையில்) தொழுது எழுவான் -பிச்சையிடுவாரைக் கும்பிடுட்டுச் செல்வன்."தாழ்சடையான்" என்பதை முதலிற் கொள்க.தன்னுடையது ஆம் கால் (பாதம்) தொழுதல் தலையாயசெயலாம். "தொழுவார், சடையார்' எனப் பன்மைப்பாடமாயின. "அயரும், படுக்கும்" என்பன பன்மை ஒருமை மயக்கமாம். 'தன்னுடையது ஆம் கால்' என்றதுசாதி யொருமை அன்றி, 'அது உருபு பன்மைக்கண் வந்தது' எனினும் ஆம்.

649.குறிப்புரை: "தலையாய" என்பது முதலாகத் தொடங்கி, இகரம்தொகுக்கப்பட்ட 'ரதிவளரும் பண்பு பாகீர்' எனமாறிக் கூட்டி, 'அதனால் என்மகள்' என்பது வருவித்துஉரைக்க. முதல் அடியில், 'அம் காட்டித் தலையால்பலி திரிவர்' என மாற்றி, தமது அழகைக் காட்டிக்கொண்டு தலையால் ஏற்கும் பலிக்கு (பிச்சைக்கு)த்திரிவர்' என உரைக்க. தலையாலங்காடு, ஒருதலம்,'தாம் தலையாலங்காடர்' என்க. தாம் - என்னைமெலிவித்தவர், என்னும் - என்று பிதற்று வாள்.பாகீரதி - பகீரதனால் கொண்டுவரப்பட்ட கங்கை.ஈற்றடியில் 'பகீர்' என்பது முதல் நீண்டு,"பாகீர்" என வந்தது. பகீர் -பகிர்ந்தளிக்கமாட்டீர். 'இரதி' என்பது எதுகைநோக்கி முதற் குறைந்து நின்றது. 'விருப்பம் (ஆசை)என்பது. வளரும் பண்பு - வளர்தற்கு ஏதுவாகியகுணத்தையுடைய திருமேனி. 'பண்பு பகீர்' என்க. இதுவீதியுலாவில் செவிலி இறைவனைக் குறையிரந்தது.