பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை492

650.பண்பாய நான்மறையான் சென்னிப் பலிதேர்வான்,
பண்பாய பைங்கொன்றைத் தாரருளான் - பண்பால்
திருமாலு மங்கைச் சிவற்கடிமை செய்வான்
திருமாலு மங்கைச் சிவன்.

94

651.சிவன்மாட் டுகவெழுதும்; நாணும் நகுமென்னும்;
சிவன்மேய செங்குன்றூர் என்னும்; - சிவன்மாட்டங்(கு)
ஆலிங் கனம்நினையும் ஆயிழை,ஈர் அங்கொன்றை
யாலிங் கனம்நினையு மாறு.,

95


650.குறிப்புரை: 'பண் மறை. பாயமறை' எனத் தனித்தனி இயைக்க. பண் - செய்யப்பட்டபாய - பரந்த; விரிந்த. நான் மறையான் - பிரமன்.'சென்னிக்கண்' என ஏழாவது விரிக்க. பண் பாயகொன்றை - வண்டுகளின் இசை பரவிய கொன்றை மலர்."அருளான்" என்பதன் பின். 'ஆயினும்' என்பதுவருவிக்க. பண்பால் - தனது இயல்பாய குணத்தினால். ("மாலும்' என ஈற்றடியிற் சேர்த்து முடிக்கமூன்றாம் அடியில், "திருமாலும்" என்பதனோடு இயைய, 'மங்கையும்' என எண்ணும்மையும், 'ஆய' என்பதுவிரித்து 'அவ்விருவரும் ஆய சிவற்கு' என்க. மங்கை, உமாதேவி 'அச்சிவற்கு' எனச் சுட்டு வருவித்துரைக்க. ஈற்றடியில் "மங்கை" என்றது காதற்பட்டதலைவியை. மடக்களிப் பயன் வேண்டி, 'சீவன்' என்பதுகுறுக்கப்பட்டது. அதற்குமுன் நின்ற சகர் ஒற்றுவிரித்தல். ஈற்றடியில் உள்ள திரு - அழகு.அதன்பின் வந்த, 'மயங்கும்' என்னும் பொருட்டாகிய "மாலும்" என்பது, 'மயங்கிக் கெடும்' எனத் தன்காரியம் தோற்றி நின்றது. "சிவன் தார்அருளானாயினும், மங்கை. தனது பண்பால் அவனுக்கு அடிமைசெய்யவேண்டி, உயிர் தன் அழகு கெட மயங்குகின்றாள்' என்றபடி. இது தலைவியது ஆற்றாமை கண்டுசெவிலி கவன்றுரைத்தது.

651. குறிப்புரை: "ஆழிழை"என்பதை முதலிலும், "சிவன் மாட்டுக எழுதும்"என்பதை இறுதியிலும் வைத்து உரைக்க. "நாணும்"என்பதன் இறுதி ஒற்று சந்தி வகையாற் கெட்டது.நாணும் - நாணுவாள். 'நகும்' என்னும் - (ஊர்)'சிரிக்கும்' என்பாள், செங்குன்றூர். கொடிமாடச்செங்குன்றூர்; ஒரு தலம், அங்குச் சிவன்மாட்டுஆலிங்கனம் நினையும் - அவ்விடத்தில் சிவனிடத்தில் தங்கித் தழுவுதலை நினைவாள்.இங்ஙனம் நினையும் ஆறு - இவள் இவ்வாறெல்லாம்எண்ணு கின்ற முறைமை. ஈர் அம் கொன்றையால் -குளிர்ந்த அழகிய கொன்றை மாலை காரணமாகவாம்.(ஆகையால் இவளை) சிவன்மாட்டு உக எழுதும் -சிவடைத்தில் கொண்டுபோய் விட்டுவிடப்புறப்படுவோம். இதில் "சிவன்" என்பது