பக்கம் எண் :

493சிவபெருமான் திருவந்தாதி

652.ஆறாவெங் கூற்றுதைத்(து) ஆனைத்தோல் போர்த்துகத்தங்(கு)
ஆறார் சடையீர் கமையாதே? - ஆறாத
ஆனினத்தார் தாந்தம் அணியிழையி னார்க்கடிமை;
ஆனினத்தார் தாந்தவிர்ந்த ஆட்டு.

96

653.ஆட்டும் அரவம், அழிந்தார் எலும்பணிவார்
ஆட்டும் இடுபலிகொண் டார்அமரர் - ஆட்டுமோர்
போரேற்றான், கொன்றையான் போந்தான் பலிக்கென்று;
போரேற்றான் போந்தான் புறம்.

97

654.புறந்தாழ் குழலார் புறனுரையஞ் சாதே
புறத்தாழ் புலிப்பொதுவுள் ஆடி, - புறந்தாழ்பொன்

சொற்பொருட் பின்வரு நிலையாகவே வந்தது. இதுவும்மேலைத் துறை.

652.குறிப்புரை: ஈற்றடியை, "ஆறாத" என்பதற்கு முன்னே கூட்டி, அது முதலாகத்தொடங்கி யுரைக்க. ஆனின் அத்தார் தாம் ஆட்டுத்தவிர்ந்த பசுக்களின் கழுத்தில் உள்ள மாலைகள்(மணிகட்டிய வடங்கள்) அசைதலை ஒழிந்தன. ('பசுக்கள்கொட்டில்களில் சென்று அடங்கின; இரவுப்பொழுதாயிற்று' என்றபடி, அதனால்) ஆனினத்தார் -ஆயர்கள் தாம் தம் அணியிழையினார்க்கு அடிமைகளாயினர். 'ஆயினும், இஃது ஆறு ஆர்சடையீர்க்கு அமையாதே; பொருந்தாதோ' என்க. இஃது இரவின்கண்தனிப் படர் மிகுதியால் ஆற்றாத தலைவி தலைவனைஎதிர்பெய்துகொண்டு கழறி யுரைத்தது. எனறே, இது"மிக்க காமத்து மிடல்"1 பெருந்திணைத்துறையாம். முதற்கண் உள்ள ஆறு ஆ - முறைமை உண்டாக.முறைமை யாவது சிவனடி யார்மேல் கூற்றுவன் செல்லாதுதவிர்தல். தனிச் சீரில். ஆறாத - சினமும்கன்றைப் பிரிந்த துயரமும் தணியாத ஆன் இனம்என்க. சினம், ஆனேற்றுக்கு உரியது.

653.குறிப்புரை: இரண்டாம்அடியில், 'அட்டும்' என்பது நீண்டு, "ஆட்டும்"என வந்தது. அட்டும் நிரப்புகின்ற. அமரரை ஆட்டும்ஓர் போர் ஏறு - தேவர்களை தன் இச்சைப்படி.நடத்துகின்ற திருமாலாகிய போர் விடை.சொல்லளவில் 'பலிக்கு' என்று சொல்லிப்போந்தானாயினும் உண்மையில் மகளிர்மேற்செய்யும் போரினை ஏற்றானாகியே புறம் போந்தான்- என்க. இதுவும் கைக்கிளைத் தலைவி தன் தோழிக்குகூறியது.

654.குறிப்புரை: புறந்தாழ்புலிப் பொதுவுள் ஆடி - நகர்க்குப் புறத்தேதங்குகின்ற புலிக்கு (வியாக்கிர பாதருக்கு) உரித்தாகிய


1. தொல் - பொருள் - அகத்திணையியல்