| மேற்றளிக்கோன், வெண்பிறையான், வெண்சுடர்போல் மேனியான் மேற்றளிக்கோன் என்றுரையான் மெய். | | 98 |
655. | மெய்யன் பகலாத வேதியன், வெண்புரிநூல் மெய்யன் விரும்புவார்க் கெஞ்ஞான்றும் - வெய்ய துணையகலான், நோக்கலான், போற்றிகலா நெஞ்சே, துணையிகலா கூறுவான் நூறு. | | 99 |
மன்றினுள் நடனம் செய்பவனும், வெண்பிறை யானும்,வெண்சுடர்போல் மேனியானும் ஆகிய சிவன், புறம்தாழ் புரிகுழலாய் - பின்புறத்தே நீண்டுதொங்குகின்ற கூந்தலை உடைய ஊர்ப் பெண்கள்சொல்கின்ற. புறன் உரை அஞ்சாதே - புறங்கூற்று மொழிக்கு அஞ்சாமலே புல தந்து - தழுவுதலாகியபுணர்ச்சியைக் கொடுத்து. ('புற்றந்து' என்பது இடைக்குறைந்து நின்றது.) ஆழ் பொன்மேற்று அளிக்கோன் -துன்பத்துள் ஆழ்கின்ற, திருமகள் போல்பவளாகியஇவள்மேல தாகிய அன்பையுடைய தலைவனாயினும்.'மேற்றளிக் கோன்' என்று மெய் உரையான் - 'தான்இத்திருமேற்றளித் தலத்தில் உறைகின்றதலைவன்தான்' என்னும் உண்மையைக் கூறிற்றிலன்,'கூறியிருந்தால், இவள் இவ்வாறு செயலனும் நிலையைஅடைதற்கு முன்பே கொண்டுபோய் அவனிடம்சேர்த்திருக்கலாம்' என்பது கருத்து. திருமேற்றளி,காஞ்சியின் கண்ணதாய ஒருதலம். அப்பெருமான்இத்தலைவியைப் புல்லியதிலனாயினும் இவளதுநிலைமையை வைத்துப் புல்லினானாகச் செவிலி கருதி இரங்கினாள் என்க. எனவே, இது கைக்கிளைத்தலைவியது கையற்ற நிலையைக் கண்டு செவிலிஇரங்கிக் கூறியதாம். மெய்யுரையாமை, தலைவி அவனைஅறிந்து கூறாமையாலும், தோழியர் அறிந்துகூறினமையாலும் அறியப்பட்டதாம். வெண்சுடர் -சந்திரன். சிவபெருமானுக்கு வெண்சுடர்போல் மேனிதிருநீற்றால் அமைந்தது. 655.குறிப்புரை: மெய்அன்பாவது, பயன் கருதாது செய்யப்படும் அன்பு.'அன்பினின்றும்' என் ஐந்தாவது விரிக்க, வேதியன்- வேதம் ஓதுபவன். 'வேதப் பொருளாய் உள்ளவன்'என்றும் ஆம், புரி நூல் மெய்யன், புரிநூல்பொருந்திய திருமேனியை உடையவன். வெய்ய துணைஅகலான் - விரும் பத்தக்க துணையாய் இருத்தலைநீங்கான். நோக்கு அகலான் - அருட் பார்வையைவிடான். இகலா நெஞ்சு - மாறு படாத நல்ல மனம், 'வான்நூறு கூறு துணை இகலா' - என மாற்றி, (அவனது பெருமைக்கு)அண்டங்கள் நூற்றில் ஒரு கூற்றளவு ஒவ்வா எனஉரைக்க. இகலுதல் - ஒத்தல் 'நெஞ்சே, வேதியனும்,நூல் மெய்யனும், விரும்புவார்க்கு அகலாதவனும் ஆகியஅவனை அண்டங்கள் நூற்றில் ஒரு கூறு
|