656. | நூறான் பயன்ஆட்டி நூறு மலர்சொரிந்து, நூறா நொடிவதனின் மிக்கதே, - நூறா உடையான் பரித்தவெரி உத்தமனை, வெள்ளே றுடையானைப் பாடலால் ஒன்று. | | 100 |
திருச்சிற்றம்பலம்
ஒவ்வா; அவனைப் போற்று' என இயைத்து முடீக்க.'அகலா' என்பன பாடம் அல்ல. 656.குறிப்புரை: நூறு ஆன் பயன் -நூறு பசுக்களின் பால். நொடிவது - சொல்வது. நூறாநொடிவது - பெயர்கள் 'நூறு' என்னும் எண் படச்சொல்வது. "நூறா உடையான்" என்பதில் (நூறு'என்பது அளவின்மையைக் குறித்து, அத்தகையவான குணங்களைக் குறித்தது. இறைவன் செய்யும் தொழில்,வகையால் ஐந்தாயினும் விரியால் எண்ணிலவாகலின், அவற்றிற்கு ஏற்பக் குணங்களும்எண்ணிலவாம். இதனை, எண்ணில் பல்குணம் எழில்பெறவிளங்கி என்னும் திருவாசகத்தாலும் அறிக. 'நூறு ஆன் பயன்ஆட்டுதல் முதலிய வற்றினும் ஒன்று பாடல் மிக்கது'என இயைத்து முடிக்க. "பாடல்" என்றதனால்"ஒன்று" - என்றது 'பாட்டு' என்பது போந்தது.ஆல், அசை, இதனால், பொதுப்படப் பாமாலை சாத்துதற்பயன் கூறியதுடன், இவ்வந்தாதியால் துதிப்பார்க்குவரும் பயனும் கூறப்பட்டதாம். ஈற்றில் நின்ற"ஒன்று" என்பது முதற்பாட்டின் முதலிற் சென்றுமண்டலித்தல் காண்க. சிவபெருமான் திருவந்தாதி - 1 முற்றிற்று
|