பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை498

661.என்றும் மலர்தூவி, ஈசன் திருநாமம்
என்றும் அலர்தூற்றி யேயிருந்தும் - என்றும்
(மூன்றாம் அடி கிடைக்கில்லை)
புகலூரா, புண்ணியனே என்.

5

662.என்னே, இவளுற்ற மால்!என்கொல்! இன்கொன்றை,
என்னே, இவளொற்றி யூரென்னும்! - என்னே
‘தவளப் பொடியணிந்த சங்கரனே’ என்னும்!
தவளப் பொடியானைச் சார்ந்து.

6

663.சார்ந்துரைப்ப தொன்றுண்டு சாவா,மூ வாப்பெருமை
சார்ந்துரைத்த தத்துவத்தின் உட்பொருளைச் - சார்ந்துரைத்த
ஆதியே! அம்பலவா! அண்டத்தை ஆட்கொள்ளும்
ஆதிஏன்(று) என்பால் அருள்.

7


பொருட்டாகவும் கொள்க. ‘யா வாய்’ என்பதில், ‘யா’ என்னும் வினா எழுத்து யகர மெய் கெட்டு, “ஆ” என நின்றது.

661. (இந்தப் பாடல் முழுமையாகக் கிடைக்கவில்லை. அதனால்பொருள் காணவும் இயலவில்லை.)

662. குறிப்புரை: ‘இவள் உற்றமால் என்னே! (இவள் உள்ள) இன்கொன்றை என்கொல்! இவள் ‘ஒற்றியூர்’ என்னும்; என்கொல்! ‘தவளப் பொடி அணிந்த சங்கரனே’ என்னும்; (என்கொல்!) அப் பொடியானைச் சார்ந்து, தவள் (தவம் செய்பவள் - ஆயினள்; என்கொல்!) என இயைத்தும், தொக்கு நின்ற சொற்களை விரித்தும் முடிக்க. இது கைக்கிளைத் தலைவிதன் ஆற்றாமை கண்டு செவிலி இரங்கிக் கூறியது. மால் - மயக்கம்; மையல், “என்” என்பன எல்லாம் இரக்கக் குறிப்புக்கள். அதனை ஈற்றிலும் வருவித்து உரைக்க. “கொல்” எல்லாம் அசைநிலை. “என்கொல்” என்பது இரக்கம் மிகுதியால் பலகாலும் சொல்லப்பட்டது.

663. குறிப்புரை: “சார்ந்து உரைப்பது ஒன்று உண்டு” என்பதை ஈற்றடியில் உள்ள “ஆதி” என்பதன் பின்னர்க் கூட்டி, “சார்ந்து - உன்னை அடைந்து, உரைப்பது - யான் உரைக்க வேண்டுவது” என உரைக்க. “சாவா, மூவாப் பெருமை” என்றது, ‘இறையியல்பு’ (‘பதியிலக்கணம்’) என்றபடி. மூவாமை - முதுமை யடையாமை. சார்ந்து - அதனைப் பற்றி. உரைத்த - சிவலோகத்தில் உள்ளார்க்குச் சொல்லிய. சார்ந்து - இவ்வுலகில் ஆல நிழலை அடைந்து. உரைத்த - நால்வர் முனிவர் முதலியோர்க்குக் கூறிய. ஆதியே - முதல்வனே. “ஆட் கொள்ளும்” என்பதன்பின் ‘அவன்’ என்பது வருவிக்க. ஆதி - ஆகின்றவனே; அண்மை விளி. ‘என்பால் வந்து’ என ஒருசொல்