667. | அடைந்துன்பால் அன்பாய் அணிமணிகொண்(டு) அர்ச்சித்(து) அடைந்துன்பால் மேலுகுத்த மாணிக்(கு) - அடைந்துன்பால் அவ்வமுதம் ஊட்டி, அணிமலருஞ் சூழ்ந்தன்று அவ்வமுத மாக்கினாய் காண். | | 11 |
668. | காணாய், கபாலி கதிர்முடிமேல் கங்கைதனைக் காணாயக் கார்உருவிற் சேர்உமையைக் - காணா உடைதலைகொண்(டு) ஊரூர் திரிவானை நச்சி உடைதலைகொண்(டு) ஊரூர் திரி. | | 12 |
‘சொன்னால் அவைகட்குத் தீர்வு காணலாம்’ என்பதாம். ஓதம் - அலை. உற்று உரையா வண்ணம் - வேறிடத்திலிருந்து வந்து துதிக்க வேண்டாமல். ஒன்று ஆனான் - அவனோடே இயைந்து ஒன்றாயினான். ‘பிரமன், மால் இருவருமே வந்து போற்றுதற்கு உரியராயினும் மாலது அன்பு நோக்கி அவனைத் தன்னோடு ஒன்றாய் இருக்க வைத்தான்’ என்றவாறு. தனிச் சீரில், ‘உற்ற’ என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. உற்ற உரை - பொருந்திய சொல், அஃது ஆகுபெயராய்ப் பொருளை உணர்த்திற்று ‘அவளைப் பொருளாக உடைய சொல்லே சொல்லத் தக்க சொல்’ என்றபடி அடி - 3 உரித்தான் - எல்லாரும் அடையத் தக்க பொருளாய் உள்ளவன். ‘எப்பொழுதும் அடைந்து உரையாய்’ என மேலதனோடு கூட்டுக. 667.குறிப்புரை: அணி - பொன் அணி. மணி - இரத்தினாபரணம். கொண்டு - பாவனையால் கொண்டு அடி - 2 “அடைந்து” என்பதனை, ‘அடைய’ எனத் திரித்து, ‘முழுதுமாக’ என உரைக்க. உன் பால் - சிறந்த பொருளாக எண்ணப்படுகின்ற பால். மாணி - பிரமசாரி; சண்டேசுரர். தனிச்சீரில் ‘அடையும்’ என்னும் பெயரெச்சம் உம்மை தொகுக்கப்பட நின்றது. அடையும் துன்பால் - தந்தையால் வந்த துன்பம் காரணமாக. “அவ்வமுதம்” எனச் சுட்டிக் கூறியது. “நீ உண்ட மிச்சிலாகிய அமுதம்’ என்பது தோன்றுதற்கு “மலர்” என்றது மாலையை. அணி மலர் - வினைத் தொகை “அவ்வமுதம்” என்பதில் அகரம் பண்டறி சுட்டு. பந்தத்தை ‘மிருத்யு’ என்றும், மோட்சத்தை ‘அமிர்தம்’ என்றும் கூறுதல் மெய்ந்நூல் வழக்கு. “பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்”1 - என மாணிக்க வாசகரும் அருளிச் செய்தார். 668.குறிப்புரை: (இதனுள் முன் இரண்டு அடிகளில் மடக்கணி வாராது, சொற்பொருட் பின்வருநிலை யணியே வந்தது.
1. திருவாசகம் - திருத்தேணோக்கம் - 7.
|