பக்கம் எண் :

501சிவபெருமான் திருவந்தாதி

669.திரியும் புரம்எரித்த சேவகனார், செவ்வே
திரியும் புரம்எரியச் செய்தார், - திரியும்
அரிஆன் திருக்கயிலை என்னாதார் மேனி
அரிஆன்(று) இருக்கயிலை யாம்.

13

670.(இப்பாட்டில் முதல் அடி கிடைக்கவில்லை)
ஆம்பரிசே செய்தங் கழியாக்கை - ஆம்பரிசே
ஏத்தித் திரிந்தானை, எம்மானை, அம்மானை
ஏத்தித் திரிந்தானை ஏத்து.

14

671.ஏத்துற்றுப் பார்த்தன் எழில்வான் அடைவான்போல்
ஏத்துற்றுப் பார்த்தன் இறைஞ்சுதலும் - ஏத்துற்றுப்
பாசுபதம் அன்றளித்த பாசூரான், பால்நீற்றான்
பாசுபதம் இன்றளியன் பால்.

15


‘நெஞ்சே’ - என்பதை முதலில் வருவித்துக் கொள்க. ‘கங்கைதனைக் காணாய்; உமையைக் காணாய்; காணா (கண்டு), நச்சி, திரி’ என இயைத்து முடிக்க. உடை தலை - உடைந்த தலை; வினைத் தொகை. “ஊர் ஊர்” என்னும் அடுக்கு இரண்டில் முன்னது பொதுவாயும், பின்னது ‘அவனது ஊர்’ எனச் சில தலங்களைக் குறிக்கும் சிறப்பாயும் நின்றன. இரண்டிலும் ‘தோறும்’ என்பது வருவிக்க. கார் உரு - நீல நிறம். நச்சுதல் - விரும்புதல். உடைதல் - நெகிழ்ந்து உருகுதல்.

669. குறிப்புரை: திரியும் புரம் - வானத்தில் சுழலுகின்ற ஊர்கள்; முப்புரம். செவ்வே - முறையாக. திரியும் - பரிணமித்து வளர்கின்ற. புரம் - பல வகை உடம்புகளை, எரியச் செய்தார் - அழித்தார்; “தேவர்களையும் அழித்தார்” என்றபடி. திரியும் - உலாவுகின்ற. அரி - சிங்கம். “ஆன்” என்றது ஆமாவை. என்னாதார் - என்று சொல்லாதவர்கள். அரி ஆன்று இருக்கை இலை - அழகு நிறைந்து இருத்தல் இல்லை. ‘இருக்கை’ என்பது எதுகை நோக்கிப் போலியாய் வந்தது. ஆம், அசை.

670. (இப்பாட்டின் முதல் அடி கிடையாமையால், பொருளை நன்குணரவும் இயலவில்லை)

671. குறிப்புரை: முதல் அடியில் உள்ள “பார்த்தன்” என்பதை முதலில் கூட்டுக. பார்த்தன் - அருச்சுனன். ஏத்து உற்று - துதித்தலைப் பொருந்தி. ஏ - உயரம். ஏத்து - ‘உயரத்திலே உற்றுப் பார்த்து’ என்க. வான் அடைவான் போல் உயரத்திலே உற்றுப் பார்த்து நிற்றல் அவனது தவ நிலையாகும். இதனை,