பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை502

672.பாலார் புனல்பாய் சடையானுக்(கு) அன்பாகிப்
பாலார் புனல்பாய் சடையானாள், - பாலாடி
ஆடுவான் பைங்கண் அரவூர்வான் மேனி,தீ
ஆடுவான் என்(று)என்றே ஆங்கு.

16


ஒருதாளின் மிசை நின்று, நின்ற தாளின் - ஊருவின்மேல்

ஒருதாளை ஊன்றி ஒன்றும்

கருதாமல் மனம் அடக்கி, விசும்பினோடு - கதிரவனைக்

கவர்வான் போல் கரங்கள் நீட்டி,

இருதாரை நெடுந்தடங்கண் இமையாது, ஓரா யிரங்கதிரும்

தாமரைப் போதென்ன நோக்க1

என்னும் வில்லி பாரதச் செய்யுளாலும் அறிக. ஏதற்றுப் பதம் - பலவகை அம்பின் ஆற்றல்களும் ஒருங்கு நிறைந்த பாசுபதாத்திரம். பாசூர், ஒருதலம், சுபதம் - நல்ல சொற்கள். ‘பாசூரானைப் பற்றிய பாக்களாகிய நல்ல என, அவாய் சொற்கள். இன்று அளியன்பால் உள’ என, அவாய் நிலையாய் நின்ற பயனிலையை வருவித்து முடிக்க அளியன் - இரங்கத் தக்கேன்; ‘எளியேன்’ என்றபடி. ‘அவனைப் பற்றிய பாக்கள் என்னிடத்தில் இருத்தலால் எனக்குக் குறை எதுவும் இல்லை’ என்பது கருத்து. “சுபதம்” என்பது வடசொல் ஆதலின் பண்புத் தொகைக்கண் ஒற்று மிகாதாயிற்று.

672. குறிப்புரை: இரண்டாம் அடியில் உள்ள, “பாலார் புனல் பாய் சடையானாள்” என்பதை இறுதியிற் கூட்டுக. பால் ஆர் புனல் பாய் சடையான் - அமுதம்போல நிறைந்த நீர் (ஆகாய கங்கை பாயப் பெற்ற சடையினை உடையவன். பால் ஆடி ஆடுவான் - பாலில் சிறப்பாக முழுகி மற்றைப் பொருளிலும் முழுகுவான். “பால்” என விதந்தமையால் அதனது சிறப்புப் பெறப்பட்டது. ‘மேனியில் அரவு ஊரப்படுவான்’ என்க. என்று என்று - அவனைப் பலவகை யிலும் சொல்லிச் சொல்லி. ஆங்கு - அவ்வாற்றால். பால் ஆர் புனல் பாய் சடை ஆனாள் - பல பக்கங்களிலும் நிறைந்துள்ள நீரில் பொருந்திய சடைப் பூண்டு போல இவள் ஆகிவிட்டாள். சடைப் பூண்டைக் ‘கிடை’ என்பர். அதனை,

நீருட் பிறந்து நிறம் பசியயேனும்
ஈரம் கிடையகத் தில்லாகும்2

என்பதனானும் அறிக. சடைப் பூண்டு வலுவற்ற ஒரு மெல்லிய பொருள். ‘காதலால் இவள் அவ்வாறு மெலிந்து விட்டாள்’ என்க.


1. ஆரணிய பருவம் - அருச்சுனன் தவநிலைச் சருக்கம் (38)
2. நாலடியார் - 360.