பக்கம் எண் :

503சிவபெருமான் திருவந்தாதி

673.ஆங்குரைக்க லாம்பொன் மலர்ப்பாதம், அஃதன்றே
ஆங்குரைக்க லாம்பொன் அணிதில்லை - ஆங்குரைத்த
அம்பலத்தும் அண்டத்தும் அப்பாலு மாய்நின்ற
அம்பரத்தும், அண்டத்தும் ஆம்!

17

674.மாயனைஓர் பாகம் அமர்ந்தானை, வானவரும்
மாயவரும் மால்கடல்நஞ்சு உண்டானை - மாய
உருவானை மாலை ஒளியானை, வானின்
உருவானை ஏத்தி உணர்.

18

675.உணரா வளைகழலா, உற்றுன்பாற் சங்கம்;
உணரா வளைகழல ஒட்டி - உணரா

இது தலைவியது வேறுபாடு கண்டு வினாய செவிலிக்குத் தோழி ‘உண்மை செப்பல்’ வகையால் அறத்தொடு நின்றது.

673. குறிப்புரை: இதனுள், “ஆங்கு” என்பனவற்றுள் முன் இரண்டும் அசைகள். ஈற்றில் உள்ளது. ‘அவ்வாறு என்னும் பொருட்டு “மலர்ப் பாதம்” எனப் பொதுப்படக் கூறப்பட்டதாயினும், சொல்லுவான் குறிப்பால் அது சிவனது மலர்ப் பாதத்தையே குறித்தது. ‘சிவனது மலர்ப் பாதத்தை உரைத்து மாற்று அறியப்படும் - பொன் என்றே சொல்லலாம். அஃதன்றே, பொன் என உரைக்கலாம். தில்லையுள் அவ்வாறு - பொன் - என்றே சொல்லப்பட்ட அம்பலத்திலும், அண்டம் முழுவதிலும், அண்டத்திற்கு அப்பாலுமாய் உள்ள அம்பரத்திலும் (சிதம்பரத்திலும் - சிதாகாசத்திலும்), அத்தன்மையதாகிய சிவலோகத்திலும் உள்ளது! என இயைத்துக் கொள்க. சிவபெருமானது திருவடிச் சிறப்பினைப் புகழ்ந்தவாறு. திருவடியாவது அவனது சத்தியேயாகலின் அஃது இவ்வகையான புகழ்ச்சிகளுக்கெல்லாம் உரியதாயிற்று. “அப்பாலுமாய்” என்ற உம்மை, ‘அண்டமும் ஆய்’ என இறந்தது தழுவி நின்றது. அண்டம் இரண்டில் பின்னது சிவலோகம் இதனுள்ளும் மடக்கணி வரவில்லை.

674. குறிப்புரை: அமர்ந்தான் - விரும்பினான். மாய வரு - இறக்கும்படி வந்த. மால் கடல் - பெரிய கடல் தனிச்சீரில் “மாயம்” என்றது வஞ்சனையை. ‘மாயத்து’ என்னும் அத்துச் சாரியை அணி நயம் நோக்கித் தொகுக்கப்பட்டது. உருவான் - ஊடுருவிமாட்டான்; ‘உட்புகான்’ என்றபடி. மாலை ஒளி மாலைக் காலத்துச் செவ்வான ஒளி. ஒளியான் - ஒளிபோல் பவன். வானின் உருவான், இறைவன் ஆகாயத்தை உருவாக உடையவன். “ஏத்தி உணர்” என்னும் பயனிலைக்கு ‘நெஞ்சே, நீ’ என்னும் எழுவாய் வருவிக்க.

675. குறிப்புரை: இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி யுரைக்க. அடி - 2ல் உணரா வளை அறியாமையாகிய கோட்டம். கழல