| அளைந்தான மேனி அணியாரூ ரேசென்(று) அளைந்தானை ஆமாறு கண்டு. | | 19 |
676. | கண்டிறந்து, காயெரியின் வீழ்ந்து கடிதோடிக் கண்டிறந்து காமன் பொடியாகிக் - கண்டிறந்து கானின் உகந்தாடும் கருத்தர்க்குக் காட்டினான் கானின்உகந் தாடுங் கருத்து. | | 20 |
677. | கருத்துடைய ஆதி, கறைமிடற்(று)எம் ஈசன் கருத்துடைய கங்காள வேடன்; - கருத்துடைய ஆன்ஏற்றான் நீற்றான் அனலாடி, ஆமாத்தூர் ஆனேற்றான் ஏற்றான் எரி. | | 21 |
நீங்க, தனிச் சீரில் “உணரா என்னும் எச்சத்தை, ‘உணர’ எனத் திரிக்க. ஒட்டி உணர்தல் - ஒன்றி உணர்தல். அவ்வாறு உணரும் உணர்வில் அணைந்து ஆன மேனி கலந்து விளங்கும் உருவம் அவ்வுருவம் விளங்குகின்ற ஆரூரில் சென்று அணைந்தானை - புற்றுருவாயவனை அணை. புற்று : அதனடியாக ‘அணைந்தான்’ என்னும் பெயர் பிறந்தது. ஆமாறு கண்டு - அவன் அங்ஙனம் ஆமாற்றைக் கண்டு. அன்பால் உற்று - அன்பால் பொருந்தினமையால். வளை சங்கம் கழலா உணரா, வளையல்களாகிய சங்குகள் கையை விட்டுக் கழன்று, தம் கடமையைத் தாம் உணராவாயின. கடமை - கழலாது கையிற் செறிந்து நிற்க வேண்டுவது. இதுவும் கைக்கிளைத் தலைவியது ஆற்றாமைக் கூற்று. 676. குறிப்புரை: ‘காமன் (மன்மதன், கண்டு இறந்து (தனது யோக நிலையைக் கண்டும் நெறி கடந்து) காய் எரியைக் கண்டு கடிது ஓடியும் அதன்கண் வீழ்ந்து இறந்து பொடியாகி (தான் அங்ஙனம் ஆம்படி) கண் திறந்து (நெற்றிக் கண்ணைத் திறந்து அதன்பின்னும்) கானின் உகந்து ஆடும் கருத்துக் காட்டினான் (அவர் அங்ஙனம் ஆடுவதன் உண்மையைப் பலரும் உணரச் செய்தான். உண்மையாவது, முற்றழிப்புக் காலத்தில் எல்லாரையும் அழித்துத் தன்னை அழிப்பார் இன்றித்தான் ஒருவனேயாய் நிற்றல். இவ்வுண்மையைக் காமனை எரித்துத் தான் அவனால் மயங்குவிக்கப்படாமல் இருந்த செயல் உணர்த்துதலால், ‘காமன் எரியின் வீழ்ந்து பொடியாகக் காட்டினான்’ என்றார். “கருத்தர்க்கு” என்னும் நான்காவதை, ‘கருத்தர்முன்’ என ஏழாவதாகத் திரிக்க. 677. குறிப்புரை: இரண்டாம் அடியில் உள்ள, “கருத்துடைய கங்காள வேடன்” என்பதை இறுதியிற் கூட்டுக. அடி-1-ல் கருத்து -
|