பக்கம் எண் :

505சிவபெருமான் திருவந்தாதி

678.எரியாடி ஏகம்பம் என்னாதார் மேனி
எரியாடி யேகம்ப மாகும் - எரியாடி
ஈமத் திடுங்காடு தேரும் இறைபணிப்ப,
ஈமத் திடுங்காடு தான்.

22

679.தானயன் மாலாகி நின்றான்; தனித்துலகில்
தானயன் மாலாய தன்மையான் - தான்அக்
கரைப்படுத்தான் நான்மறையைக் காய்புலித்தோ லாடைக்
கரைப்படுத்தான்; தன்பாதஞ் சார்.

23


கருணை. தனிச் சீரில் ‘கறுத்து’ என்பது எதுகை நோக்கி “கருத்து” எனத் திரிந்து நின்றது. கறுத்து - சினந்து. ‘சின விடை’ என்றபடி சினம், இன அடை. ஆமாத்தூர் ஆன் ஏற்றான் - ஆமாத்தூரில் தன்னை வழிபட்ட பசுக்களைக் காக்க ஏற்றுக் கொண்டவன். ‘எரி ஏற்றான்’ என மாற்றிக் கொள்க. இதுவும் பெயர். அடி-2-ல் கருதுடைய - ‘பிறவி துடைப்புண்ணும்படி கங்காள வேடன் ஆயினான்’ என்க. ‘சிவபிரானது திருமேனியில் தம் உடம்பு தீண்டப் பெற்றவர் பிறப்பறுவர்’ என்பது பற்றி இவ்வாறு கூறினார். கங்காளம் பிரம விட்டுணுக்களது எலும்புக் கூடு. இவைகளைச் சிவபிரான் தன் தோள்மேல் தாங்கினான். “கங்காளம் தோள்மேலே காதலித்தான் காணேடி1 என்னும் திருவாசகத்தால் அறிக.

678. குறிப்புரை: இரண்டாம் அடியில் உள்ள ஏகாரம் தேற்றம். அதன்பின் வந்த “கம்பம்” நடுக்கம் ஆதலின், அஃது இங்குச் சாம்பலாகிச் சிந்துதலைக் குறித்தது. தனிச் சீரில் எரியாடி - தீ எரியப்படுவதாகிய. ‘ஈ மத்தை’ என்பதில் சாரியை நிற்க ஐ உருபு தொகுதல் இலேகினாற்2 கொள்க. ஈமத்தையும் இடும் காட்டையும் ஆடரங்காகத் தேரும் இறை சிவன் அவன் பணிப்ப - பணித்தலால். ஈமம் - பிணம் சுடும் விறகு. ஈற்றடியில் உள்ள ‘காடு’ ஆகுபெயராய் அதன்கண் கிடக்கும் விறகைக் குறித்தது. ‘ஈமத்தோடு ஈமமாய் ஒழிவதேயன்றித் தன்னை எடுத்த உயிருக்கு யாதொரு பயனையும் தந்ததாகாது’ என்றபடி. முன்னர், “எரியாடியே கம்பம் ஆகும்” என்றது அக்கருத்துப் பற்றியேயாம். ஈற்றில் உள்ள “தான்” என்பதும் தேற்றப் பொருளில் வந்தது.

679. குறிப்புரை: “காய் புலித்தோல் ஆடைக் கரைப் படுத்தான்" என்பது, ‘சிவன்’ என்னும் அளவாய் நின்றது. அதனை முதலிற் கொள்க. அதன்கண் “கரை” என்றது ஆடையில் அமைக்கப்படும்.


1. திருச்சாழல் - 11.
2. தொல் - எழுத்து - தொகை மரபு.