பக்கம் எண் :

507சிவபெருமான் திருவந்தாதி

682.அடுத்தபொன் அம்பலமே சார்வும் அதனுள்
அடுத்த திருநட்டம் அஃதே - அடுத்ததிரு
ஆனைக்கா ஆடுவதும் மேல்என்பு பூண்பதுவும்
ஆனைக்கா வான்தன் அமைவு.

26

683.அமைவும் பிறப்பும் இறப்புமாம், மற்றுஉங்(கு)
அமைவும் பரமான ஆதி - அமையும்
திருவால வாய்சென்று சேராது, மாக்கள்
திருவாலவாய்சென்று சேர்.

27


உரைத்ததற்குஏற்ப, முதற்கண் ‘எங்கள் பெருமானே’ என்பதை வருவித்துக் கொள்க. வான் ஆளும் அம் கை உமை - வானுலகத்தை ஆள்கின்ற அழகிய செய்கையை உடைய உம்மை. மேலாய மங்கை உமை வந்து அடுத்து ‘வம்’ (என்று தடுத்திலளே; (ஏன்?) - ‘உம்மை நஞ்சு யாதும் செய்யாது - என்னும் கருத்தினாலோ? என்பது குறிப்பெச்சம். ‘வம்’ என்பது தடுத்தலை உணர்த்தும். குறிப்பு ‘என்று’ என்பது சொல்லெச்சம் சிவபெருமானது அளவில் ஆற்றலைப் புலப்படுத்தவாறு. ஈற்றடி எழுத்தொப்புமை மாத்திரையால் மடக்காயிற்று.

682. குறிப்புரை: “அடுத்த” ‘மூன்றினுள் முதலது, ‘அண்மையில் உள்ள’ என்றும், இடையது ‘ஏற்புடையது’ என்றும், இறுதியது, ‘பொருந்தியுள்ள’ என்றும் பொருள் தந்தன. சார்வு - இருப்பிடம். “அஃதே” என்பதன்பின்னும், ‘அஃதேயும்’ என எண்ணும்மை விரிக்க. ஆன் ஐ - இடப உருவான தலைவன்; திரு - இலக்குமி. திருவைப் பொருந்தியுள்ள தலைவன் மாயோன். ‘அவனுக்காக ஆடுவது’ என்றது. அவன் மத்தளம் முழக்க அதற்கு ஏற்ப ஆடுதல், ஈற்றடியில் உள்ள ஆனைக்கா, தலம். அமைவு - பொருந்திய ஒழுக்கம்.

683. குறிப்புரை: “அமைவு” இரண்டில் முன்னது உலக வாழ்வு. பின்னது (உங்கு - பிறப்பையும், இறப்பையும் கடந்த) வீடுபேறு, பரம் ஆன ஆதி - இவை அனைத்தும் தன்மேல வாகக் கொண்ட முதல்வன்; இறைவன். அவன் அமைந்துள்ள திருவாலவாய்த் தலம்’ என்க. மாக்கள் - அறிவிலா மக்கள் திருவால் - செல்வத்தால்; செல்வமாகிய காரணத்தால் அவாய்ச் சென்று சேர் - மேலும் மேலும் அவாவி ஓடி. அஃது இருக்கும் இடத்தை நாடி அடைதல். ‘இரங்கத் தக்கது’ என்பது சொல்லெச்சம். சேர் - சேர்தல்; முதனிலைத் தொழிற் பெயர். ‘சேர்வு’ என்பதே பாடம் எனினும் ஆம். “ஆம், ஆன” - என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, “ஆதி” என்னும் ஒரு பெயர் கொண்டன.