684. | சென்றுசெருப் புக்கால் செல்ல மலர்நீக்கிச் சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச் - சென்றுதன் கண்இடந்(து)அன்றுஅப்புங் கருத்தற்குக் காட்டினான் கண்இடந்(து)அன்று அப்பாமைப் பார்த்து. | | 28 |
685. | பார்த்துப் பரியாதே; பால்நீறு பூசாதே; பார்த்துப் பரிந்தங்கம் பூணாதே; - பார்த்திட்(டு) உடையானஞ் சோதாதே; ஊனாரைக் கைவிட்(டு) உடையானஞ் சோதாதார் ஊண். | | 29 |
686. | ஊணொன்றும் இல்லை உறக்கில்லை உன்மாலின் ஊணென்று பேசவோர் சங்கிழந்தாள்; - ஊணென்றும் விட்டானே! வேள்வி துரந்தானே! வெள்ளநீர் விட்டானே புன்சடைமேல் வேறு! | | 30 |
684. குறிப்புரை: இப்பாட்டுக் கண்ணப்ப நாயனாருக்கு அருள் செய்தமையை விளக்குவதாதல் வெளிப்படை. இதிலும் மடக்கணி வரவில்லை. ‘காலால்’ என ஆல் உருபை விரித்து ஓதுதல் பாடம் அன்று. ஈற்றடியில் கண் - மற்றொரு கண்ணை. இடந்து அப்பாமைப் பார்த்து - இடந்து அப்பாதபடி உற்று நோக்கி, காட்டினான் - தனது மற்றொரு கண்ணும் ஊறு இன்றி விளங்குதலைக் காட்டினான். கருத்து - உள்ளம். அஃது ஆகுபெயராய் உள்ளத்தின்கண் உள்ள அன்பைக் குறித்தது. எனவே, “கருத்தன்” என்றது ‘அன்பன்’ என்றதாயிற்று. 685. குறிப்புரை: “ஊனாரைக் கைவிட்டு” என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. ஊன் - உடம்பு. கைவிடுதல் - பற்று விடுதல். ஊண் - உண்ணும் தொழில். இதனை எழுவாயாக வைத்து, “பரியாது”, “பூசாது” முதலியவற்றை அதற்குப் பயனிலைகளாக்கி முடிக்க. அப்பயனிலைகளில் உள்ள ஏகாரங்கள் யாவும் தேற்றம். “பரியாது, பூசாது” முதலியன, ‘அவைகளைச் செய்யாமலே உண்டாகும்’ என்றபடி. அதனால், ‘அந்த உணவு நியாயமான உணவாகாது, தண்ட உணவாம்’ எனக் கடிந்துரைத்ததாயிற்று பார்த்தல் - தக்கதை உணர்தல். பரிதல் - அன்பு செய்தல். அங்கம் - உடம்பு. பூணுதற்கு, ‘கண்டிகை’ என்னும் செயப்படுபொருள் வருவிக்க. அஞ்சு - அஞ்செழுத்து. 686. குறிப்புரை: ‘ஊண் என்றும் விட்டானே” என்பது முதலாகத் தொடங்கி, ‘இவள் தன்னை’ என்பது வருவித்து உன் மாலின் ஊணால், ‘ஊண் இல்லை; உறக்கு இல்லை;’ என ஊரார் பேசும்படி சங்கினை இழந்தாள்’ என இயைத்து முடிக்க. ஏகாரங்கள்
|