687. | வேறுரைப்பன் கேட்டருளும்; வேதம்நான் காறங்கம் வேறுரைத்த மேனி விரிசடையாய்! - வேறுரைத்த பாதத்தாய்! பைங்கண் அரவூர்வாய் பாரூரும் பாதத்தாய்என்னும் மலர். | | 31 |
688. | மலர்அணைந்து கொண்டு மகிழ்வாய்உன் பாத மலர்அணைந்து மால்நயன மாகும் - மலர்அணைந்து மன்சக் கரம்வேண்ட வாளா அளித்தனையால் வன்சக்கர் அம்பரனே வாய்த்தது. | | 32 |
விளியுருபு. ‘என்றும் ஊண்விட்டான்’ என்பது, ‘அவன் உண்பதும் இல்லை; உறங்குவதும் இல்லை’ என்பதைக் குறித்தது. ஆயினும் தக்கனது அகங்காரத்தை அடக்க வேண்டி அவனது வேள்வியைத் துரந்தான். உறக்கு - உறக்கம். மால் மயக்கம்; மையல். “மாலின்” என்னும் இன் வேண்டாவழிச் சாரியை. ‘மாலாகிய ஊணால்’ என்க. மையல் ஊணாக உருவகம் செய்யப்பட்டது. ஓர் - ஒப்பற்ற; சிறந்த. இதுவும் தலைவியது ஆற்றாமையைத் தோழி தலைவற்கு உரைத்து வரைவு கடாயது. 687. குறிப்புரை: ‘எம்பெருமானீர்’ என்பது வருவித்து, “வேறு உரைப்பன் கேட்டருளும்” என முடிக்க. வேறு - வேறாக; சிறப்பாக. உரைக்கப்படும் பொருள் ஈற்றில் உள்ள “அலர்” என்பது. அலர் - பழிச்சொல். அஃதாவது தலைவி, “விரிசடையாய்” என்றும், “பாதத்தாய்” என்றும், “அரவு ஊர்வாய்” என்றும் இங்ஙனம் பலவாறு பிதற்றும் பிதற்றுரை அஃது அவர் அருளாமையால் உண்டாவதாகலின் பழியாயிற்று. வேறு உரைத்த - பிற நூல்களினினும் மேலாய்ச் சிறந்து விளங்கச் சொல்லிய. ‘மேனிமேல் விரிந்த சடையாய்’ என்க. வேறு உரைத்த பாதம் - ஏனைப் பலரது பாதங் களினின்றும் வேறு பிரித்து வேதாகமங்கள் உயர்த்துக் கூறிய பாதம். அவ்வுயர்வாவது, உயிர்களின் பொருட்டு ஐந்தொழிலையும் செய்தல் ஈற்றடியில் ‘பாதத்தாய்’ என்பது இடைக் குறைந்து, “பாதத்தாய்” என நின்றது. ‘அரவு பார் ஊரும் பாதத்தாய் ஊர்வாய்’ என இயைக்க. ஊர்வாய் - ஊரப்படுவாய். என்னும் அலர் - என்று இவள் சொல்கின்ற பழி. இதுவும் மேலைத் துறை - ‘அலர்’ என்பது சந்தி வகையால் “மலர்” என வந்தது. அவ் எழுத்தெல்லாம் பற்றியே “மலர்” என்பது அந்தாதியாயிற்று. 688. குறிப்புரை: ஈற்றடியில் சக்கு, ‘சக்கர்’ எனப் போலியாய் நின்றது. சக்கு - கண். வன் சக்கு - நெருப்புக்கண் அம் பரன் - அழகிய முதல்வன். இவ்வாறான ஈற்றடியை முதலிற் கூட்டுக. மலர் அணைந்து கொண்டு - அன்பர்கள் இடும் மலர்களை மேனிமேல்
|