691. | கடனாகக் கைதொழுமின்; கைதொழவல் லீரேல், கடல்நாகைக் காரோணாம் மேயான் . கடநாகம் மாளவுரித் தாடுவான் நும்மேல் வல்வினைநோய் மாளவிரித் தாடுவான் வந்து. | | 35 |
692. | வந்தார் வளைகழல்வார்; வாடித் துகில்சோர்வார்; வந்தார் முலைமெலிவார்; வார்குழல்கள் - வந்தார் சரிதருவார்பைங்கொன்றைத் தாராரைக் கண்டு சரிதருவார்பைங்கொன்றைத் தார். | | 36 |
693. | தாரான் எனினும் சடைமுடியான், சங்கரன்அம் தாரான் தசமுகனைத் தோள்நெரித்துத் - தாராய நாளுங் கொடுத்தந்த வானவர்கள் தம்முன்னே வாளுங் கொடுத்தான் மதித்து. | | 37 |
691. குறிப்புரை: கட நாகம் - மதத்தையுடைய யானை. ‘காரோணம் மேயானும், ஆடுவானும் ஆகிய பெருமானைத் தொழுமின்; தொழ வல்லிரேல், அவன் வந்து உம்முடைய வல்வினை நோய் மாளும்படி இரித்து (ஒட்டி) ஆடும் (உங்களுடன் கலந்து விளங்குவான்.) என ஏற்குமாறு இயைத்து முடிக்க. ‘மேயார், ஆடுவார்’ எனப் பன்மையாகவும். ‘நம்’ எனத் தன்மையாகவும் ஓதுவன பாடங்கள் அல்ல. 692. குறிப்புரை: மூன்றாம் அடி சிவபெருமானைக் குறித்த தொடராகும். சரிதரு - ‘சடையில் நிரம்பி, வெளியேயும் வீழ்கின்ற தார்’ என்க. “தாரார்” என்றாராயினும் ‘தாரார் முன்’ என விரித்து “வந்தார்” என மேலே கூட்டிப் பின், ‘அவரைக் கண்டு வளைகழல்வார்’ என உரைத்தல் கருத்து என்க. ‘சுரிதருவார்’, ‘ஐங்கொன்றை’ என்பன பாடம் அல்ல. வந்தார் - வந்த மகளிர். “வந்தார்” என்பன பலவும் சொற்பொருட் பின்வருநிலையணியாய் வந்தன. இறுதியில், ‘பைங்கொன்றைத் தார்போலும் வார் குழல்கள் சரிதருவார்’ என இயைத்து முடிக்க. இதன்கண் “தார்” என்றது, தார்போலும் காயை. கொன்றைக் காயை மகளிரது கூந்தலுக்கு உவமையாகக் கூறுதல் வழக்கம். பெருமானது திருமேனி யழகைப் புகழ்ந்தவாறு. 693. குறிப்புரை: ‘சடை முடியான்; சங்கரன்; அம் தாரான்; (அத்தாரினை இப்பொழுது நமக்குத்) தாரான் எனினும், தசமுகனை முதலில் சினந்து) தோள் நெரித்துப் பின்பு (நன்கு, மதித்து, அந்த வானவர்கள்தம் முன்னே வாழ்நாளும் கொடுத்துத் தார் ஆய (தூசிப் படையில் ஏற்கத் தக்கதாகிய) வாளும் கொடுத்தான்; (ஆகலின் பின்பு
|