705. | கரையேனும் மாதர் கருவான சேரும் கரையேனும் ஆது கரையாம்; - கரையேனும்; கோளிலியெம் மாதி குறிபரவ வல்லையேல் கோளிலியெம் மாதி குறி. | | 49 |
706. | குறியார் மணிமிடற்றுக் கோலஞ்சேர் ஞானக் குறியாகி நின்ற குணமே - குறியாகும் ஆலங்கா டெய்தா அடைவேன்;மேல் ஆடவரம் ஆலங்கா டெய்தா அடை. | | 50 |
இருக்கச் செய்தான். அவன் அன்றே விடை ஊர்வானது திருமேனியை (சிவலிங்கத்தை) சேதுக் கரையில் திருத்தினார். (செம்மையாக நிறுவி வழிபட்டான்.) இராமேச்சரத் தலத்தின் சிறப்புணர்த்தியவாறு. 705. குறிப்புரை: அடி-1-ல் ‘கரேணுவும்’ என்பது “கரை யேனும்” என மருவி நின்றது. கரேணு - யானை. அடி-2-ல் முதற்கண் கரை. எதுகை நோக்கித் திரிந்த கறை; அதன் பொருள் ‘அழுக்கு’ என்பது. இரண்டாவது கரையாம் - சொல்ல மாட்டோம்; ‘சொல்ல வேண்டுவதில்லை’ என்பதாம். அதற்குமுன் ‘அது’ என்னும் சுட்டுப் பெயர் நீண்டு, “ஆது” என வந்தது. யானையாயினும், மாதரது கருப்பைகள் அழுக்குப் பொருளாயினும்; சேரும் - அதன்கண் சேர்ந்துதான் பிறக்கும். அது கரையாம் - அதனை நாம் செய்ய வேண்டுவதில்லை. யானை தெய்வத் தன்மையுடைய உயிராகக் கருதப்படுவதுடன் பெரிய உருவத்தையும் உடையது. ஆயினும் அது பிறப்பது. என்றால் கருப்பையுள் வீழ்ந்து கிடந்துதான் பிறக்கவேண்டும். (ஆகவே, எத்துணைத் தூயோரும், பெரியோரும் ‘பிறப்பது’ என்றால் கருவில் வீழ்ந்து யோனிவாய்ப் பட்டுத்தான் பிறக்க வேண்டும். அதனால் அதனை நீ வெறுத்தல் உண்மையாயின். கோளிலி எம் ஆதிதன் குறி (இலிங்கம்) கரையேனும் - எல்லைக்குட்பட்ட சிறுபொருளாயினும் (அதன் பெருமையை உணர்ந்து அதனை நீ) பரவ வல்லையேல். (நீ) கோள் இலி எம் ஆதி குறி - குற்றம் இல்லாதவனாகிய எம் முதல்வனாம் சிவபெருமானால் குறிக்கப்படும் பொருளாவை. ‘பிறவிக் கடலினின்றும் எடுக்கப்படுவை’ என்றபடி. இறுதிக்கண் ‘ஆவை’ என்னும் பயனிலை எஞ்சிநின்றது. கோளிலி, சோழநாட்டுத் தலம். 706. குறிப்புரை: “குறி” மூன்றில் முதலது, உடம்பில் உளதாகின்ற ‘மச்சம்’ என்னும் அடையாளம். ‘சிவபெருமான் திருமேனி முழுதும் சிவந்திருக்க, மிடற்றில் மட்டும் உள்ள நஞ்சுக்கறை மச்சம்போல உள்ளது’ என்றபடி. இடையது அடையாளம். ‘கறை மிடற்றோடு’ கூடிய திருமேனி ஞானத்தின் அடையாளமாய் உள்ளது’ என்றபடி.
|