பக்கம் எண் :

517சிவபெருமான் திருவந்தாதி

707.அடையும் படைமழுவும், சூலமும் அங்கி
அடையும் பிறப்பறுப்ப தானால் - அடைய
மறைக்காடு சேரும் மணாளர்என்பாற் சேரார்,
மறைக்காடு சேர்மக்கள் தாம்.

51

708.தாமேய ஆறு சமய முதற்பரமும்
தாமேய ஆறு தழைக்கின்றார்; - தாமேல்,
தழலுருவர், சங்கரவர், பொங்கரவம் பூண்ட
தழலுருவர் சங்கரர்என்பார்.

52


அவ்வாறாகி நின்ற குணமாவது அருள். தனிச் சீரில் உள்ள குறி, திருமேனி. ஆலங்காடு, ‘திருவாலங்காடு’ என்னும் தலம். “எய்தா” இரண்டு, ‘எய்தி’ என்னும் பொருட்டாய வினையெச்சம் ஈற்றில் ஆல் - ஆலம் விழுது. ‘ஆட’ என்பதில் ஈற்று அகரம் தொகுக்கப்பட்டது. ‘எம்பெருமானே’ என்பதை முதற்கண் வருவித்து. ‘நீ ஞானக் குறியாகி நின்ற குணமே குறியாகியுள்ள ஆலங்காடு என்று நான் அடைவேன். நீ ஆடு அரவங்கள் உன் மேல் ஆலம் விழுது போல அங்கு ஆட என்முன் வந்து அடை’ எனமுடிக்க. ‘உனது திருக்காட்சியைத் தந்தருள வேண்டும்’ என வேண்டியவாறு.

707. குறிப்புரை: சிவபெருமான் மழுப் படையையும், சூலப் படையையும் நெருப்பையும் ஏந்தி யிருத்தல் தன்னை அடைந்தாரது பாசத்தை போக்குமாற்றால் அவர்களது பிறப்பை நீக்குங் குறியாய் இருக்கவும், (நல் ஊழ் இன்மையால்) பிறந்து இறப்பவராகிய மக்கள் ‘திருமறைக்காட்டில் எழுந்தருளி யிருக்கும் அழகர்’ எனப்படுகின்ற அவரை அடைய மாட்டார்கள். (வேறு எங்கெல்லாமோ சென்று அடைவார்கள்’ என்றபடி.) ஈற்றடியில் உள்ள “மறைக் காடு” - இடு காடு.

708. குறிப்புரை: தாம் மேய ஆறு சமய முதல் பரமும் - சமயிகள் பலரும் அவரவர் விரும்பிய ஆறு சமயங்கட்கும் முதல்வர்களாய் உள்ள கடவுளர் பலரும். (‘பரம்’ என்பது ஆரியச் சொல்லாயினும் தமிழில் வடசொல்லாய், சொல் வகையால் அஃறிணை யியற்பெயராய், இங்குப் பன்மை குறித்து நின்றது.) தாம் ஏய ஆறு தழைக்கின்றார் - சிவபெருமானால் ஏவியவாற்றானே பெருமை பெற்று விளங்கு கின்றனர். (‘தொழிற் கடவுளர் பலரும் உயிர் இனத்தவர் ஆதலின் அவர் யாவரும் சிவபெருமானது திருவருளானே கடவுள் தன்மை பெற்று அதிகாரத்தில் உள்ளனர் என்றபடி.) தாமேல் - இனி அவரோ (சிவபெருமானாரோ) என்றால். தழுவல் உருவர் - (‘தழுவல்’ என்பது உகரங்கெட்டு, ‘தழல்’ என நின்றது.) உமாதேவியால் தழுவப்பட்ட உருவத்தை யுடையவர். (‘அருளாகிய சத்தியோடு